Tuesday, May 5

’அயலான்’ -விமர்சனம்

கதையின் நாயகன் சிவகார்த்திகேயன்கொடைக்கானலின் பூம்பாறை கிராமத்தில் இயற்கையை நேசிக்கும் மனம் கொண்டவராய் விவசாயம் செய்தவண்ணம் தாயுடன் வாழ்ந்து வருகிறார் வேலைக்காக சென்னைக்கு வரும் அவர் பிறந்தநாள் பார்ட்டிகள் ஏற்பாடு செய்யும் கருணாகரன் குழுவில் இணைகிறார், வான்மண்டலத்திலிருந்து இருந்து பூமியில் சிதறிய ‘ஸ்பார்க்’ என்ற ஒரு பொருளை கொண்டு பூமியின் மையப்பகுதியில் உள்ள இயற்கை வளங்களை கொள்ளை கொள்ளும் நோக்கத்தோடு உள்ள கார்ப்பரேட் வில்லன் ஒருவன் பூமியில் இருக்கும் அந்த பொருளை தேடி வேற்று கிரகத்தில் இருந்து வரும் ஒரு ஏலியனுக்கு வில்லனால் பிரச்சனைகள் ஏற்படுகிறது . தனது விண்கலத்தையும் வில்லன் குழுவால் ஏலியன் இழக்கிறது ,இதன் பின் சிவகார்த்திகேயனின் குழுவில் இணையும் ஏலியன், தன் விண்கலத்தைகுழுவிடமிருந்து எப்படி மீட்டதா ? ஏலியன் பூமிக்கு வந்த திட்டம் என்னவானது? எனும் வினாக்களுக்கு சரியான விடைகளை அயலானின் மீதி திரைக்கதை சொல்லும்.கதையின் நாயகனாய் சிவகார்த்திகேயன் யதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை ஈர்க்கிறார் அவருக்கு அடுத்த படியாய் உள்ள ஏலியன் “டாட்டூ” சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது .ஏலியனுக்கு பொருத்தமான குரல் கொடுத்துள்ள சித்தார்த் தனி கவனம் பெறுகிறார்.
ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார் அவர் தனக்கு கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தியுள்ளார் மேலும் யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிக்கும்படி உள்ளது.

எதிர்மறை கூட்டணியின் வில்லன்கள் குழுவில் ஷரத் கேல்கர், ஈஷா கோபிகர் நடித்துள்ளார்கள், இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்தின் கதை நகர்வுக்கு சிறப்பாக வழிவகுக்கும் வகையில் உள்ளது.
கிராமம் முதல் பெருநகரம் வரை நீரவ் ஷாவின் கேமராஅழகை பதிவு செய்துள்ளது. குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த ஜானரில் இப்படத்தை இயக்குநர் ரவிக்குமார் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சயின்ஸ் பிக்ஷன் கதைகள் பெரிய அளவில் வருவதில்லை, அதை நிறைவு செய்யும் சில படங்களில் இந்த அயலானும் இடம் பெறுவான், மேலும் குழந்தைகளுடன் விடுமுறை நாளில் பார்க்கவும் மிகவும் உகந்த படம் இந்த அயலான் .

Spread the love