ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியும் அகத்தர மதிப்பீட்டுக் குழுவும் இணைந்து நட த்திய 15 ஆம் ஆண்டு ‘ஷா-கலா உட்சவ் -2023’கலைநிகழ்ச்சி தேனாம்பேட்டை நாரதகான சபாவில் சிறப்பாக நடைபெற்றது.
'ஷா-கலா உட்சவ் -2023'கலைநிகழ்ச்சி
இந்நிகழ்ச்சியில் கலை இயக்குநர், கலாபிரதர்ஷினி கலைமாமணி திருமதி பார்வதி ரவி கண்டசாலா அவர்களும் பொன்னியின் செல்வன் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கல்லூரியின் செயலர் ஸ்ரீமதி உஷா அபய ஸ்ரீஸ்ரீமால், இணைச்செயலர் முனைவர் ஹரீஷ் எல் மேத்தா, கல்லூரி முதல்வர் முனைவர் சா.பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு விருந்தினர் திருமதி பார்வதி ரவி கண்டசாலா அவர்கள் உரையாற்றுகையில் மாணவர்கள் மத்தியில் இக்கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்வது பெருமையாக உள்ளது என்றும் தனது பள்ளிப் பருவமும் கல்லூரிப் பருவமும் நினைவிற்கு வருவதாகவும் கூறி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்ததோடு மாணவர்கள் கலையில் கவனம் செலுத்துவது அவர்களின் மனத்திற்கும் எண்ணத்திற்கும் ஆரோக்கியாமானது என்றும் கூறினா...









