Tuesday, April 28

Author: admin

கௌதம் கார்த்திக் நடித்த 1947 ஆகஸ்ட் 16

கௌதம் கார்த்திக் நடித்த 1947 ஆகஸ்ட் 16

சினிமா
கௌதம் கார்த்திக் நடித்த 1947 ஆகஸ்ட் 16 வித்தியாசமான கதைகள் மற்றும் ஜானர்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் நடிகர் கெளதம் கார்த்திக் தனது சினிமா பயணத்தை வெற்றிகரமாக அமைத்துள்ளார் . ஒரு படத்தில் இருந்து மற்றொன்றுக்கு வித்தியாசமான பாத்திரங்களை பரிசோதிக்கும் இவர் தற்போது, பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய என்.எஸ்.பொன்குமார் எழுதி இயக்கிய அவரது "1947 ஆகஸ்ட் 16" படத்தில் நடித்துள்ளார். படத்தின் முதல் சிங்கிள் ட்ராக், 'கோட்டிகார பயலே' மற்றும் டீசர் இரண்டுமே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இளைஞர்கள் மத்தியில் வெளியிடப்பட்ட முதல் சிங்கிள் ட்ராக் உடனடியாக பிரபலமடைந்தது. மேலும், சிறந்த காட்சியமைப்புகள், சிறந்த தயாரிப்பு மற்றும் கெளதம் கார்த்திக்கின் சிறப்பான நடிப்பு போன்றவற்றை உள்ளடக்கிய டீசர் படத்தின் எதிர்பார்ப...

‘மாவீரன்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது

சினிமா
சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியது சென்னை (மார்ச் 11, 2023): நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் ‘மாவீரன்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது என்பதை சாந்தி டாக்கீஸ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.   மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ படம் அறிவித்த நாளில் இருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. சமீபத்தில் சுமார் 500 உள்ளூர் நடனக் கலைஞர்கள் இடம்பெற்ற முதல் சிங்கிளான- ‘சீன் ஆ சீன் ஆ' ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்று, தங்கள் படத்தின் உரிமையை சன் டிவி பெற்றுள்ளதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயன், மிஷ்கின் மற்றும் தெலுங்கு நடிக...
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் முதல் முறையாக ஐபிஓ மூலம் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுகிறது

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் முதல் முறையாக ஐபிஓ மூலம் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுகிறது

செய்திகள்
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் முதல் முறையாக ஐபிஓ மூலம் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுகிறது VELS FILM INTERNATIONAL LIMITED திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். புதிய முயற்சியின் முதல் கட்டமாக, ‘இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்’ (ஐபிஓ) மூலம் பொதுமக்களுக்கு பங்குகளை வழங்குகிறது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு… “வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் என்பது சென்னையைத் தளமாகக் கொண்ட ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும், இது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினராகவும் உள்ளது. இது திரைப்பட தயாரிப்பு, திரைப்பட விநியோகம் மற்றும் திரைப்பட உரிமை விற்பனை போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழ் திரையுலகம் மட்டுமின்றி பிற பிராந்திய மொழிகளிலும் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்த...
‘அகிலன்’ -விமர்சனம்

‘அகிலன்’ -விமர்சனம்

சினிமா
சென்னை துறைமுகத்தில் க்ரேன் ஆப்ரேட்டராக அகிலன் என்னும் கதாபாத்திரத்தில் (ஜெயம் ரவி) நடித்துள்ளார் , அகிலனுக்கு, கடத்தல் மன்னன் கபூர் (தரூண் அரோரா) மூலமாக அசைமென்ட் ஒன்று வழங்க ப்படுகிறது.இறுதியில் அகிலன் தனக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்டை முடித்தாரா ? ‘கிங் ஆஃப் இந்தியன் ஓஷன்’ என்ற பட்டம் அவருக்கு கிடைத்ததா? இப்படி பல வினாக்களுக்கு விடை தரும் வகையில் படத்தின் மீதி கதை உள்ளது .இயக்குனர் எஸ். பி. ஜனநாதனின் மாணவரான இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இதற்க்கு முன்பு பூலோகம் படத்தில் ஜெயம் ரவியை ஒரு குத்துச்சண்டை வீரனாக பரிமளிக்க வைத்த அவர் இந்தப் படத்திலும் ஜெயம் ரவிக்கு மற்றுமொரு சிறப்பான ஆக்ஷன் கதையினையும் கதாபாத்திரத்தையும் அவர் கொடுத்துள்ளார் மாறுபட்ட முற்றிலும் ஆக்ஷன் நிறைந்த கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி சிறப்பாக நடித்துள்ளார் . படத்தின் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த...
கொன்றால் பாவம்- விமர்சனம்

கொன்றால் பாவம்- விமர்சனம்

சினிமா
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மல்லிகாவும் (வரலக்ஷ்மி சரத்குமார்) மற்றும் அவரது பெற்றோர்களும் – (ஈஸ்வரி ராவ் மற்றும் சார்லி) வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள்,அவர்களது வறுமைமல்லிவின் திருமணம் நடக்காமல் இருக்க காரணமாக உள்ளது இந்த சூழ்நிலையில் வழிப்போக்கனாக அர்ஜுன்(சந்தோஷ் பிரதாப்) அந்த குடும்பத்தில் சேர்கிறார். அவரிடம் இருக்கும் நிறைய பணம், நகைகளை பார்த்தவுடன் மல்லிகாவின் குடும்பத்திற்கு அதன் மீது ஆசை ஏற்பட்டு அவனை கொல்ல நினைக்கிறது. இறுதியில் அந்த குடும்பம் அர்ஜுனை கொன்றார்களா? அவரிடம் இருந்த பணம், நகைகள் என்னாவாயிற்று ? பின்பு அந்த குடும்பத்தின் நிலை என்ன? என்பது தான் இந்த கொன்றால் பாவம் படத்தின் மீதி. படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ள மல்லிகா என்னும் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நன்கு நடித்துள்ளார் ,படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் அவர் நடித்து ...
சேத்தன் சீனு நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் ‘பீஷ்ம பருவம்’ படப்படிப்பு பூஜையுடன் துவங்கியது

சேத்தன் சீனு நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் ‘பீஷ்ம பருவம்’ படப்படிப்பு பூஜையுடன் துவங்கியது

சினிமா
சேத்தன் சீனுவின் பீஷ்ம பருவம் படத்திற்காக அமைக்கப்பட்ட 45 அடி உயரமுள்ள மகாகாளி செட் தமிழில் இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கத்தில் வெளியான கருங்காலி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு. அதை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைத்து மந்த்ரா-2, ராஜு காரி கதி, பெல்லிக்கி முந்து பிரேமகதா உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்தார். தொடர்ந்து தற்போது தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் சரிசமமாக கவனம் செலுத்த துவங்கியுள்ள சேத்தன் சீனு புன்னகை பூவே, கண்ணுக்குள் நிலவு, காசி, சமுத்திரம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை காவேரி கல்யாணி இப்போது இயக்குனராக மாறி தமிழ், தெலுங்கில் இயக்கியுள்ள பான் இந்திய படமாக உருவாகியுள்ள ‘புரொடக்சன் நம்பர் ;1’ என்கிற படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதுதவிர அறுபடை முருகன் புரொடக்ச...
35 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் 22 நாட்கள் குகைக்குள் நடைபெற்ற ‘ரூட் நம்பர் 17’ படப்பிடிப்பு

35 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் 22 நாட்கள் குகைக்குள் நடைபெற்ற ‘ரூட் நம்பர் 17’ படப்பிடிப்பு

சினிமா
காற்றே வராத குகைக்குள் தினமும் 14 மணி நேரம் ; ஜித்தன் ரமேஷின் ஜிலீர் அனுபவங்கள் நேனி எண்டர்டைன்மெண்ட்ஸ் சார்பில் டாக்டர் அமர் இராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடிக்க கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார். ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் இராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, காசி விசுவநாதன் மற்றும் எவர்க்ரீன் அற்புதாநந்தம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசேபச்சன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் நடிகர் ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இன்னும் ம...
ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு

ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு

சினிமா
மார்ச் 12 ஆம் தேதி ( நாளை ) ஹாங்காங்கில் நடைபெறவுள்ள கௌரவமிக்க 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் “பொன்னியின் செல்வன் -பாகம் 1” (PS1) - சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி), சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு (ஏகா லக்கானி) , ஆகிய 6 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க லைக்கா புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பாளர் திரு.சுபாஸ்கரன் அவர்களின் சார்பாக லைக்கா , திரு. ஜி்.கே.எம்.தமிழ் குமரன் மற்றும் , மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம் அவர்களின் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோருடன் திரு. ஸ்ரீகர் பிரசாத் மற்றும் திரு. ரவி வர்மன் ஹாங்காங் பயணம் மேற்கொள்கின...
‘கூழாங்கல்’ படப்புகழ் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி-அன்னா பென் நடிக்கும் ‘கொட்டுக்காளி’*

‘கூழாங்கல்’ படப்புகழ் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி-அன்னா பென் நடிக்கும் ‘கொட்டுக்காளி’*

சினிமா
*சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்கும், 'கூழாங்கல்’ படப்புகழ் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி-அன்னா பென் நடிக்கும் 'கொட்டுக்காளி'* சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையிலான தனித்துவமான கதைகள் மற்றும் சிறந்த படமாக்கலுக்கு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இப்போது, தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கும் தங்களது புதிய திரைப்படமான ‘கொட்டுக்காளி’-யை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இப்படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், ‘கூழாங்கல்’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த இயக்குநரான பி.எஸ். வினோத்ராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார்.   இது குறித்து தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறும்போது, ​​“ஒரு படைப்பாளி தன்னுடைய சொந்த மண்ணின் கூறுகளை அதன் த...
அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் “ASVINS”

அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் “ASVINS”

சினிமா
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா (SVCC) ,தயாரிப்பு: பிவிஎஸ்என் பிரசாத், வழங்குபவர்: பாபிநீடு பி, இணைத் தயாரிப்பு: பிரவீன் டேனியல் அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் “ASVINS” தரமணி (2017) & ராக்கி (2021) ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகரான வசந்த் ரவி, தற்போது சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லரான 'ASVINS' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். திரைக்கதை ஆசிரியரும் இயக்குநருமானமான தருண் தேஜா, இந்தியாவின் சென்னை மற்றும் ஜெர்மனியின் வொல்ப்ஸ்பர்க் என இரண்டையும் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார். அவரது சிந்தனையைத் தூண்டும் குறும்படங்களுக்காக அவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றில் சில பல்வேறு ஐரோப்பிய சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் ஐரோப்பாவில் உள்ள சுயாதீன திரைப்பட கம்யூனிட்டியில் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. தருண் இப்போது தனது 20 நிமிட பைலட் ...