Wednesday, April 29

Author: admin

சிட்டாடெல் நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்)னுடன் சிறப்பு உளவாளியாக பணியாற்ற ஒரு வாய்ப்பு

சிட்டாடெல் நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்)னுடன் சிறப்பு உளவாளியாக பணியாற்ற ஒரு வாய்ப்பு

சினிமா
சிட்டாடெல் நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்)னுடன் சிறப்பு உளவாளியாக பணியாற்ற ஒரு வாய்ப்பு 'சிட்டாடல்' எனும் சர்வதேச உளவு நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு பொருத்தமான நபர்கள் தேவை என அந்நிறுவனத்தின் சிறப்பு உளவாளியான நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்) சமூக வலைதளத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் எனும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது.... உளவாளியாக பணியாற்ற என்ன செய்ய வேண்டும்? வேகம், வலிமை, மன உறுதி, சூழலை தழுவி செல்லும் பாங்கு.. போன்ற எல்லா திறனும் பெற்ற சில உளவாளிகள்.. சாதாரண உளவு நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். 'சிட்டாடல்' உலகில் உள்ள அனைத்து உளவு நிறுவனங்களிலும் முதன்மையான உயரடுக்கு உளவு நிறுவனம். இந்நிறுவனத்தில் மேசன் கேன்( ரிச்சர்ட் மேடம்), நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்) உள்ளிட்ட பல சிறப்பு வாய்ந்த உளவாளிகளின் தலைம...
மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் First Look போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார்!

மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் First Look போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார்!

சினிமா
மன்சூர் அலிகானின் "சரக்கு" படத்தின் First Look போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார்! இந்த படத்தில் கஜினி அலிகான், மஹபீர் அலிகான், விஜய்சேதுபதி, இயக்குனர் ஜெயக்குமார்.ஜே, தில்ரூபா அலிகான், ஜஹாங்கிர் அலிகான் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் உள்ளனர்! தமிழ்நாட்டை பாடாய் படுத்தும் மதுவை வைத்து, ஒரு புரட்சி படைப்பு "சரக்கு" என்கிறார் மன்சூர் அலிகான். மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வலினா பிரின்ஸ் நடிக்கிறார். சிறப்பு தோற்றத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், கிங்ஸ்லி, சேசு, தீனா, ரவிமரியா, லொள்ளு சபா மனோகர், மூஸா, மதுமிதா, வினோதினி, லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், பாரதி கண்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில், மன்சூர் அலிகான் தயாரிக்கிறார். ஜெயக்குமார்.ஜே இயக்குகிறார். ஒளிப்பதிவு அருள் வின்செ...
முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகிறார்

முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகிறார்

சினிமா
மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தை YNOT ஸ்டுடியோஸ் பேனரில் தயாரித்து இயக்குகிறார் எஸ். சஷிகாந்த். 'தமிழ்ப் படம்', 'விக்ரம் வேதா', 'இறுதி சுற்று' மற்றும் தேசிய விருது பெற்ற 'மண்டேலா' உள்ளிட்ட பல வெற்றிகரமான மற்றும் பெரிதும் பாராட்டப்பட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளரான YNOT ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகிறார். பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் திறமை மிகுந்த தயாரிப்பாளரான எஸ். சஷிகாந்த், தனது 23வது தயாரிப்பான 'டெஸ்ட்' மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கதை சொல்லலில் ஆழ்ந்த ஆர்வம், திறமைகளை கண்டறிவதில் மிகுந்த ஈடுபாடு, புதிய முயற்சிகளை கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றால் இதுவரை அறியப்பட்ட எஸ்.சஷிகாந்த்தின் திரைப்பட இயக்கத் திறமையை பறைசாற்றவுள்ள 'ட...
‘L.G.M’ படத்தின் Firstlook-கை பாராட்டிய எம். எஸ். தோனி

‘L.G.M’ படத்தின் Firstlook-கை பாராட்டிய எம். எஸ். தோனி

சினிமா
'L.G.M' படத்தின் Firstlook பாராட்டிய எம். எஸ். தோனி தோனி எண்டர்டெய்ன்மெண்ட்டின் முதல் தயாரிப்பான'L.G.M' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, ''இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியுடனும், 'L.G.M' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குடனும் இருந்த தருணங்கள்.. என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்கள்'' என குறிப்பிட்டிருக்கிறார். 'எல். ஜி. எம்' படத்தின் ஒவ்வொரு புதிய தகவல்களும் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் உற்சாகப்பட வைத்திருக்கிறது. மேலும் புதிய தகவல்களுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். மைதானத்தில் 'கிரிக்கெட் மேதை' தோனியின் பரபரக்கும் கிரிக்கெட்டை கண்டு ரசித்தது முதல்... அவர் 'எல் ஜி எம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது வரை.. 'L.G.M'படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்க...
 கிரிக்கெட்டர் அஷ்வின் தலைமையில் ’22 யார்ட்ஸ்’ அமைப்பு கிரிக்கெட்டிற்கான சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாமை ஏப்ரல் 14 அன்று ஆரம்பிக்க உள்ளது

 கிரிக்கெட்டர் அஷ்வின் தலைமையில் ’22 யார்ட்ஸ்’ அமைப்பு கிரிக்கெட்டிற்கான சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாமை ஏப்ரல் 14 அன்று ஆரம்பிக்க உள்ளது

விளையாட்டு
கிரிக்கெட் ரசிகரான ஆதித்யா ரவி தன்னுடைய 16-வது வயதில் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆசையில் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். 2014 இல் R. அஷ்வின் வழிகாட்டியாக இருந்த ஜென் நெக்ஸ்ட் கிரிக்கெட் இன்ஸ்டிடியூட் மூலம் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டார். மேலும், லீக் அணியில் திறமையை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது. இருப்பினும், அடுத்தடுத்த ஆண்டுகளில்,வாய்ப்புகள் மற்றும் எங்கு அணுகுவது என்பது அவருக்குத் தெரியாததால், லீக் அணியில் சேருவது அவருக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. இதுபோன்ற இக்கட்டான காலக்கட்டத்தில் தோன்றிய யோசனையே '22 யார்ட்ஸ்'. தமிழ்நாடு முழுவதும் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை அங்கீகரிக்கும் வகையிலும், திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் தளமாகவும் '22 யார்ட்ஸ்' அமைந்தது. பின்பு தங்கள் வீரர்களின் திறமைகளை சுவைக்க மேட்ச் எக்...
தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாண்புமிகு முதல்வர் திரு. M.K. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாண்புமிகு முதல்வர் திரு. M.K. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

சினிமா, செய்திகள்
சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் விரைவில் அமைக்கப்படும் என்று தமிழ் சினிமாவிற்கு சிறப்பான ஒரு செய்தியை நேற்று சட்டசபையில் வெளியிட்ட மாண்புமிகு முதலமைச்சர் திரு.M.K. ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.M.P. சாமிநாதன் அவர்களுக்கும் முதலில் எங்களின் மனமார்ந்த நன்றி. தமிழக ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை 2020-21-ம் ஆண்டுகளுக்கு பிறகு, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. 2022-ல் 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தமிழில் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளன. இந்த வளர்ச்சி மேலும் தொடர்ந்து தமிழ் சினிமா துறை ரூபாய் 5,000 கோடிக்கு மேல் வியாபாரம் செய்யும் துறையாக விரைவில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தைகைய வளர்ச்சியை எட்ட முட்டுக்கட்டையாக இருப்பது, தமிழ் நாட்டில் ஸ்டூடியோக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே. த...
‘யாத்திசை’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

‘யாத்திசை’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

சினிமா
'யாத்திசை' டிரெய்லர் வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், திரைப்படத்தை ஏப்ரல் 21 அன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியிடுகிறது வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் வழங்கும் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'யாத்திசை'. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதைதான் 'யாத்திசை'. வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெய்லர் மூலம் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த இப்படம் ஏப்ரல் 21 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 'யாத்திசை' தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரியும், வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இன்டர்நேஷனலும் பெற்றுள்ளனர். இந...
நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனி வெளியிட்ட ‘எல். ஜி. எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனி வெளியிட்ட ‘எல். ஜி. எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

சினிமா
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் முதல் தமிழ் திரைப்படமான 'எல்.ஜி. எம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை எம். எஸ் தோனி தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இசையமைப்பாளரும், இயக்குநருமான ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'எல். ஜி. எம்'. இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஃபில் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி வரும் இப்படத்தின் தயாரிப்பாளரான விகாஸ் ஹசிஜா பேசுகையில், '' 'எல். ஜி. எம்' சிறப்பாக உருவாகி வருகிறது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் பின்னணி வேலைகளைத் தொடங்கவிருக்கிறோம். தமிழ...
‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

சினிமா
பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'ப்ராஜெக்ட் கே' எனும் திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது படமாக்கப்பட்ட காணொளியின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டிருக்கிறது. படைப்புத்திறன் மிகு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'ப்ராஜெக்ட் கே'. 'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் அதிக பொருட்செலவில் தயாராகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தை தனித்துவமான பாணியில் விளம்பரப்படுத்த திட்டமிட்ட படக் குழுவினர், இதன் ஒரு பகுதியாக 'ஃபிரம் ஸ்க்ராட்ச்' எனும் பெயரில் படத்தின் முன் தயாரிப்பு பணிகளின் காணொளியை வெளியிட்டனர். இந்த காணொளியின் முதல் பாகத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கரத்தை மீண்டும் கண்டுபிடிப்பது குறித்த பல விசயங்கள் இடம் பிடித்திருந்தது. இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும், ஆ...
2023 – 2026 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தேர்தல்  23-4-2023  அன்று  நடைபெற உள்ளது.

2023 – 2026 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தேர்தல் 23-4-2023 அன்று நடைபெற உள்ளது.

சினிமா
2023 - 2026 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தேர்தல் வருகின்ற 23-4-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் சம்மேளன அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில்... தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் திரு. RK. செல்வமணி அவர்கள் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடுகிறார். அவருடைய தலைமையிலான அணியில் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு, தயாரிப்பு நிர்வாகிகள் சங்க செயலாளர் திரு. B. சுவாமிநாதன் அவர்களும், பொருளாளர் பொறுப்பிற்கு டிரைவர்ஸ் யூனியன் தலைவர் திரு. T. S. செந்தில்குமார் அவர்களும், துணைத் தலைவர்கள் பொறுப்பிற்கு: மேக்கப் மேன் யூனியன் தலைவர் திரு.சபரிகிரிசன் அவர்களும், இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் தலைவர் திரு. தினா அவர்களும், கலை இயக்குநர்கள் சங்க செயலாளர் திரு. மோகன மகேந்திரன் அவர்களும், ஸ்டண்ட் யூனியன் தலைவர் திரு. தவசிராஜ் அவர...