Wednesday, April 29

Author: admin

பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட அப்டேட்

பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட அப்டேட்

சினிமா
நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ராம் சியா ராம்..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படம், மீண்டும் புதிய சரித்திரத்தைப் படைக்கத் தயாராகிறது. இந்த படத்தில் இடம்பெறும் 'ராம் சியா ராம்..' என தொடங்கும் இரண்டாவது பாடல், மே 29ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே தருணத்தில் வெளியாகிறது. இசையமைப்பாளர்களான சாசெட்- பரம்பரா ஆகியோரின் இசையமைப்பில் பாடலாசிரியரும், கவிஞருமான மனோஜ் முன்டாஷீர் எழுதிய இந்த பாடல், எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவரும். திரைத்துறை சேனல்கள், இசை சேனல்கள் , ஏனைய பொழுதுபோக்கு சேனல்கள்.. இதைத் தவிர்த்து இந்தியா முழுவதும் எழுபதிற...
பிரைம் வீடியோ வரலாற்றில் எந்தவொரு புதிய தொடரையும் விட அதிக அளவு சர்வதேச பார்வையாளர்களை ஈர்க்கும் பட்டியலில் சிட்டாடெல் இரண்டாவதாக உள்ளது; ஜோ ருஸ்ஸோ சீசன் இரண்டையும் முழுதாக இயக்குகிறார்

பிரைம் வீடியோ வரலாற்றில் எந்தவொரு புதிய தொடரையும் விட அதிக அளவு சர்வதேச பார்வையாளர்களை ஈர்க்கும் பட்டியலில் சிட்டாடெல் இரண்டாவதாக உள்ளது; ஜோ ருஸ்ஸோ சீசன் இரண்டையும் முழுதாக இயக்குகிறார்

சினிமா
ருஸ்ஸோ பிரதர்ஸின் ஸ்பை த்ரில்லர் பிரைம் வீடியோவில் இரண்டாவது சீசனுக்காக புதுப்பிக்கப்பட்டுள்ளது சிட்டாடெல் பிரீமியர் எபிசோடை மெம்பர்ஷிப் இல்லாமல் மே 26 முதல் பிரைம் வீடியோவில் இலவசமாக பார்க்க முடியும். அதே வேளையில், சீசன் 1 முழுவதுமாக பிரைம் வீடியோவில் காணலாம். கல்வர் சிட்டி , கலிபோர்னியா—மே 25, 2023— பிரைம் வீடியோ, உலக அளவில் வெற்றி பெற்ற சிட்டாடெல் தொடரை இரண்டாவது சீசனுக்காகப் புதுப்பித்துள்ளதாக இன்று அறிவித்தது, ஜோ ரூஸ்ஸோ ஒவ்வொரு எபிசோடையும் இயக்க, நிர்வாகத் தயாரிப்பாளர் டேவிட் வெயில் ஷோரன்னராகத் திரும்புகிறார். ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், லெஸ்லி மான்வில் மற்றும் ஸ்டான்லி டுசி ஆகியோர் நடித்துள்ள இந்த ஸ்பை த்ரில்லர்--இந்தியா, இத்தாலி, பிரேசில், தென்னாப்பிரிக்கா, யு.கே மற்றும் யு.எஸ். உள்ளிட்ட உலக நாடுகளில் பிரேக்அவுட் வெற்றியை தொடர்ந்து அனுபவித்து வருகிறது. இது...
கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்ட ‘பிம்பிளிக்கி பிலாப்பி’ டீசரை பார்த்த உலகெங்கிலும் இருந்து வந்திருந்த  திரைத்துறையினர்  பாராட்டு

கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்ட ‘பிம்பிளிக்கி பிலாப்பி’ டீசரை பார்த்த உலகெங்கிலும் இருந்து வந்திருந்த திரைத்துறையினர் பாராட்டு

சினிமா
ஏகே புரொடக்ஷன்ஸ் தளபதி ஆர். ஆனந்தகுமார், ஜியாஸ் புரொடக்ஷன்ஸ் ஜெசிலன் பாலன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'பிம்பிளிக்கி பிலாப்பி' திரைப்படத்தின் டீஸர் கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்டது Teaser Link: https://youtu.be/F_bTWUipTi0 ஏகே புரொடக்ஷன்ஸ் தளபதி ஆர். ஆனந்தகுமார், ஜியாஸ் புரொடக்ஷன்ஸ் ஜெசிலன் பாலன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிம்பிளிக்கி பிலாப்பி' படத்தின் டீஸர் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்ட 'பிம்பிளிக்கி பிலாப்பி' டீசரை பார்த்த உலகெங்கிலும் இருந்து வந்திருந்த இயக்குநர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் வெகுவாக பாராட்டினர். பிரான்ஸ், இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் உள்ள அழகான பகுதிகளில் படமாக...
கேன்ஸ் திரைப்பட விழாவில்  இயக்குனர் சங்ககிரி ராஜ்குமாரின் ONE திரைப்படத்தின் டிரைலர் ஒளிபரப்பப்பட்டது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமாரின் ONE திரைப்படத்தின் டிரைலர் ஒளிபரப்பப்பட்டது.

சினிமா
பிரான்ஸ் நாட்டில் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.விழாவில் வெங்காயம் திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தனி ஒருவனாக ஒரு திரைப்படத்திற்கான அனைத்து வேலைகளையும் செய்து எடுத்து முடித்த ONE திரைப்படத்தின் டிரைலர் ஒளிபரப்பப்பட்டது.திரைப்பட விழாவிற்கு வந்திருந்த பல்வேறு நாட்டினரின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றது. குறிப்பாக அமெரிக்கா, கனடா, பிரேசில், ஜப்பான் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் திரைத்துறையினரின் மத்தியில் பெரும் ஆச்சரியத்துடன் கூடிய வரவேற்பை பெற்று சிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இயக்குனர் சங்ககிரி ராஜ்குமாரரிடம் இந்த படம் எப்படி எடுக்கப்பட்டது, ஒற்றை மனிதராக இப்படத்தை எடுத்து முடிக்க எதிர்கொண்ட சவால்கள் என்ன ?, எப்படியான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும் இ...
மாஸ் மஹாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் பான் இந்திய பிரமாண்ட படைப்பு “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

மாஸ் மஹாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் பான் இந்திய பிரமாண்ட படைப்பு “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

சினிமா
தி காஷ்மீர் ஃபைல்ஸ், கார்த்திகேயா 2, என இந்திய அளவில் பிளாக்பஸ்டர்களை வழங்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தற்போது தென்னிந்தியா மற்றும் வட இந்தியா முழுமைக்குமான ஒரு பான் இந்திய திரைப்படமான “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்துடன் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது. இந்தியா முழுதும் ரசிகர்களை கொண்டிருக்கும் மாஸ் மகாராஜா ரவிதேஜா இப்படத்தில் நடிக்கிறார். இயக்குநர் வம்சி இயக்க, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் அகர்வால் இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தின் துவக்கமே அனைவரது புருவத்தையும் உயர்த்தும் வகையில் மிக பிரமாண்டமாக துவங்கியுள்ளது. படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சுவாரஸ்யமான ஒரு வீடியோவை தற்போது தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ராஜமுந்திரியில் உள்ள சின்னமான ஹேவ்லாக் பாலம் (கோதாவரி) எனும் இடத்தில் பிரம்மாண்டமாக பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவிற்கென ஒரு ரயில...
 M360° ஸ்டுடியோஸ் ரோஷ் குமார் வழங்கும், பி திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது!

 M360° ஸ்டுடியோஸ் ரோஷ் குமார் வழங்கும், பி திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது!

சினிமா
 M360° ஸ்டுடியோஸ் ரோஷ் குமார் வழங்கும், பி திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது! தனித்துவமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் நடிகர்கள் சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் தங்களது சிறந்த நடிப்புத்திறன் மற்றும் பன்முகத்தன்மையை பல படங்கள் மூலம் நிரூபித்துள்ளனர். இதன் மூலம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் கதாநாயகர்களாக வலம் வருகிறார்கள். இப்போது இருவரும் அறிமுக இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சமரன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இதனை M360° ஸ்டுடியோஸின் ரோஷ் குமார் தயாரித்துள்ளார். முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், புதிய ஷெட்யூல் விரைவில் தொடங்கும் என்றும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக ...
‘தீராக் காதல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

‘தீராக் காதல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

சினிமா
'தீராக் காதல்' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் 'தீராக் காதல்'. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்… பாடலாசிரியர் மோகன்ராஜா பேசியதாவது இந்தப்படத்தில் 'உசுராங்கூட்டில்..' என்ற பாடலை எழுதியுள்ளேன். இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் சித்து குமாருக்கு நன்றி. பாடலாசிரியரைப் படுத்தி எடுப்பதில் முதன்மையானவர் சித்து தான். பல முறை விவாதத்திற்குப் பின் 'உசுராங்கூட்டில்..' என்ற வார்த்தை பிடித்து, அதில் பாடல் எழுதினோம். அவருடன் எப்போதும் நிறைய விவாதத்திற்கு பிறகே பாடல் முடிவா...
பரபரக்கும் திரில் பயணம், வெளியானது “போர் தொழில்” டீசர்

பரபரக்கும் திரில் பயணம், வெளியானது “போர் தொழில்” டீசர்

சினிமா
குற்ற விசாரணை பின்னணியில், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரில்லர், “போர் தோழில்,” திரைப்படம் ஜூன் 9 அன்று திரைக்கு வர உள்ளது. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான டீசரை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். கொலையாளியை தேடும் சவால் மிகுந்த, திரில் பயணத்தை அழகாக காட்டுகிறது டீசர். வன்முறை மிகுந்த இருண்ட உலகில், ஒவ்வொரு மூலையிலும் எதிர்பாராத ஆபத்து பதுங்கியிருக்கும் நிலையில், ஒரு பிரகாசமான ஆனால் இளகிய இதயம் கொண்ட ஒரு புதிய இளம் காவலதிகாரி தனது வாழ்வில், மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறார். அவரது முதல் விசாரணையில் பணியில் வெற்றிபெற, அவருக்கு எதிர்தன்மை கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மூத்த காவலருடன் இணைய வேண்டும். ஒன்றாக, அவர்கள் தங்கள் வேறுபாடுகளைக் கடந்து, ஒரு சைக்கோ கொலையாளியை வேட்டையாடும் பயணத்தில் ஈடுபடுகிறார்கள்., சரத்குமார், அசோக் செல்வன் முதன்மை பாத்திரங்களி...
மஞ்சு வாரியர் & சைஜு ஶ்ரீதரன் இணையும் ஃபுட்டேஜ் படம் திரிச்சூரில் கோலாகலமாக துவங்கியது !!

மஞ்சு வாரியர் & சைஜு ஶ்ரீதரன் இணையும் ஃபுட்டேஜ் படம் திரிச்சூரில் கோலாகலமாக துவங்கியது !!

சினிமா
திருச்சூர் நகரின் மையப்பகுதியான சிம்னி அணைக்கு அருகில், பிரபல எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் இயக்குநராக அறிமுகமாகும் ஒரு புதிரான புதிய படமான "ஃபுட்டேஜ்' படத்தினை புகழ் பெற்ற நடிகை மஞ்சு வாரியர், ஸ்விட்ச்-ஆன் செய்து துவக்கி வைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, முதல் ஷாட்டுடன் மிக இனிமையான நிகழ்வாக துவங்கியது. "அஞ்சம் பாதிரா", "கும்பளங்கி நைட்ஸ்," மற்றும் "மஹேஷின்டே பிரதிகாரம்" போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் எடிட்டிங்கில் மூளையாக செயல்பட்டவர் சைஜு ஸ்ரீதரன். மிகப்பிரபலமான எடிட்டர் எனும் நிலையிலிருந்து, தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். இந்தியத் திரையுலகின் மிகப்பிரபலமான ஆளுமையாக விளங்கும் நடிகை மஞ்சு வாரியர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார் இவருடன் விசாக் நாயர் மற்றும் காயத்ரி அசோக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கின்றனர். மூவி பக்கெட், காஸ்ட்...
ஐந்து சூப்பர் ஸ்டார்கள் இணைந்து “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளனர்

ஐந்து சூப்பர் ஸ்டார்கள் இணைந்து “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளனர்

சினிமா
மாஸ் மஹாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் பான் இந்தியப் பிரமாண்ட படைப்பு “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகர்கள் வெங்கடேஷ், ஜான் ஆபிரகாம், சிவ ராஜ்குமார், கார்த்தி, துல்கர் சல்மான் ஆகியோர் இணைந்து வெளியிட உள்ளனர் !!! மாஸ் மஹாராஜா ரவி தேஜாவின் நடிப்பில் பெருமை மிகு பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது “டைகர் நாகேஸ்வர ராவ்”. இயக்குநர் வம்சி இயக்கத்தில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 என இரண்டு அடுத்தடுத்த பிளாக்பஸ்டர்களை வழங்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் அகர்வால்- இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் அதிரடியான பர்ஸ்ட் லுக் மே 24ல் வெளியாகவுள்ளது. இந்திய திரையுலகின் ஐந்து மொழிகளைச் சேர்ந்த ஐந்து சூப்பர் ஸ்டார்கள் இணைந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளனர். தெலுங்கு...