பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் & ஜி ஜெயராம் வழங்கும், இயக்குநர் ஐ. அகமது இயக்கத்தில், ஜெயம் ரவி-நயன்தாரா நடித்துள்ள ’இறைவன்’ திரைப்படம் நான்கு மொழிகளில் ஆகஸ்ட் 25, 2023 அன்று வெளியாகிறது!
சிறந்த நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் பெரிய படங்களுக்காக இணையும் போது நிச்சயம் அது பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும். அந்த வகையில், தமிழ் சினிமாவின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பான்-இந்திய நடிகர் ஜெயம் ரவி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குநர் ஐ.அகமது ஆகியோர் முதன்முறையாக ’இறைவன்’ படத்திற்காக இணைந்துள்ளனர். தங்கள் சரியான திட்டமிடல் மற்றும் இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதன் மூலம் தொடர்ந்து ஆச்சரியப்படுத்தி வந்த படக்குழு, இப்போது தங்கள் படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு இந்திய மொழிகளில் திரைக்கு வரவுள்ளது. ‘என்றென்றும் புன்னகை’, ’மனிதன்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் அகமது இந்த ஆக்ஷன் திரில்லர் படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தின் ப...









