நாயகன் மார்ட்டின் (எஸ்.பி.சித்தார்த்), தனது காதல் மனைவி நாயகி லீனா(சைதன்யா பிரதாப்)வுடன் ஊட்டியில் வசித்து வருகிறார். மனைவிக்கு சர்ப்பிரைஸ் கொடுப்பதற்காக அவரது செல்போனில் அவருக்கே தெரியாமல் செயலி ஒன்றை பொருத்துவதன் மூலம் மனைவி என்ன செய்கிறார் ?என்ற நடவடிக்கைகளை பதிவு செய்து, அதை ஒரு வீடியோ தொகுப்பாக்கி பரிசளிக்க நினைக்கிறார் , இதன் மூலம் லீனாவின் மற்றொரு முகம் அவருக்குத் தெரிந்து அதிர்ச்சி அடைகிறார்.அதன்பின் நடக்கும் பல சம்பவங்கள் மார்ட்டீனுக்கு மேலும் அதிர்ச்சிகளை தருகின்றன. தன் மனைவியை வைத்து தன்னைச் சூழ்ந்து இருக்கும் அந்த மர்மமுடிச்சுகளை நீக்கும் முயற்சியில் இறங்குகிறார். இறுதியில் அவரது முயற்சிகளுக்கு பலன் கிடைத்ததா ? இல்லையா? என்பதுதான் ‘அதோமுகம்’ படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக மார்ட்டீன் என்னும் கதாபாத்திரத்தில் எஸ்.பி. சித்தார்த் நடித்திருக்கிறார். ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு முற்றிலும் பொருந்த கூடிய வகையில் நன்றாக நடித்துள்ளார்
நாயகியாக, நாயகனின் மனைவி லீனாவாக சைதன்யா பிரதாப் நடித்துள்ளார் கதாபாத்திரத்துக்கு ஏற்ற மாறுபட்ட பரிமாணங்களில் நிறைவாக நடித்துள்ளார் . மேலும் நாயகனின் நண்பராக அனந்த் நாக் , சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள அருண் பாண்டியன் போன்றவர்களும் தங்களது நடிப்பால் ரசிகர்களிடம் தனி கவனம் பெறுகிறார்கள்.

இது போன்ற சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் கதைகளுக்கு மிகவும் பெரிய பங்களிப்பை தரக்கூடியவை படத்தின் ஒளிப்பதிவும் , பின்னணி இசையும் தான் ,அந்த வகையில் இந்த படத்தின் சிறப்பான ஒளிப்பதிவை அருண் விஜயகுமாரும் ,தரமான பின்னணி இசையினை சரண் ராகவனும், அதோடு கூடுதல் சிறப்பாக விஷ்ணு விஜயனின் நேர்த்தியான படத்தொகுப்பும் ,படத்துக்கு தொழில்நுட்ப பலத்தை கொடுத்து ,இயக்குனரின் படைப்புக்கு மேலும் வலு சேர்த்துள்ளன..
கணிக்க முடியாத ட்விஸ்ட்களுடன் ,நிறைவான திரைக்கதையுடன் படத்தினை நன்கு இயக்கியுள்ளார் இயக்குநர் சுனில் தேவ்.
‘அதோமுகம்’ – சஸ்பென்ஸ் . திரில்லர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த புதிய திரை முகமாக இருக்கும் .
