அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த்ரவி நடித்திருக்கும் படம் ‘அஸ்வின்ஸ்’ .

கடந்த காலத்தின் ஒரு சமயத்தில் வாழ்ந்த விவசாயி ஒருவருக்கு இருக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். இதனால் வருத்தமடைந்த அந்த விவசாயி அஸ்வினி தேவர்களை நோக்கி பிரார்த்தனை செய்து தவம் இருக்கிறார்.அவர் முன் தோன்றும் அஸ்வினி தேவர்கள், ”இருவரில் ஒரு சிறுவனையே பிழைக்க வைக்க முடியும்” என்று கூறி ஒருவனுக்கு மட்டுமே உயிர் கொடுப்பதோடு , இயற்கையாகத்தான் இவனுக்கு மரணம் நிகழும் மற்றபடி எந்தவகையாலும் இவன் உயிர் போகாது என்று வரமும் கொடுக்கிறார்கள் அதோடு இரண்டு குதிரை முக சிலைகளை அந்த விவசாயியிடம் கொடுத்து, ”இந்த இரண்டு சிலைகளையும் எப்பொழுதும் இணைத்தே வைத்திருத்தல் வேண்டும்,அதற்கு மாறாக அவற்றை பிரித்தால், ஒரு சிலை பாதாள அரக்கனிடம் சென்றுவிடும் , அதனால் இந்த உலகத்துக்கு ஆபத்து நேரிடும் ” என்று எச்சரிக்கை விடுத்துவிட்டு செல்கின்றனர். ஆனால், அந்த சகோதரனை ஏமாற்றி தீய சக்தி ஒன்று அந்தச் சிலையை எடுத்துச் சென்றுவிடுகிறது ,இதனால் அந்த ஊரில் உள்ள பலரும் உயிரிழக்கின்றார்கள்,லண்டனில் உள்ள ஒருஅரண்மனை போன்றதொரு மாளிகையில் ஆராய்ச்சி செய்ய போகும் ஆர்த்தி என்னும் தொல்பொருள் ஆய்வாளர் , அந்த தீய சக்தியினால் பாதிக்கப்படுகிறார், அவருடன் இருந்த 15 பேரும் அகால மரணம் அடைய, ஆர்த்தியும் தற்கொலை செய்து கொள்கிறார்.

இந்த சூழ்நிலையில் அமானுஷ்யங்கள் பற்றிய விபரங்களை அலசும் யூ டியூப் சேனலை நடத்தி வரும் வசந்த் ரவியும், அவரது நண்பர்களும் அந்த மாளிகைக்கு வீடியோ எடுப்பதற்க்காக வருகின்றார்கள் , அதன் பின் அங்கு நடக்கும் அதி பயங்கரமான அமானுஷ்ய நிகழ்வுகளும் ,அந்த திகில் மாளிகைக்குள் சென்ற வசந்த் ரவி மற்றும் அவரது குழுவினருக்கும் என்ன நடந்தது .? என்பதே அஸ்வின்ஸ் படத்தின் மீதி கதை.
இந்த படத்தில் ’தரமணி’, ‘ராக்கி போன்ற படங்களில் நடித்திருந்த வசந்த் ரவி ,அர்ஜுன் என்னும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார், மற்றும் ஆர்த்தியாக விமலா ராமன், சரஸ்வதி மேனன்,. முரளிதரன், உதயாதீப் போன்றோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப நன்கு நடித்துள்ளார்கள்.

பொதுவாக திகில் ,ஹாரர் சஸ்பென்ஸ் படங்களுக்கு ஒளியும், ஒலியும்(SOUND &LIGHT) மிகவும் முக்கியமான அம்சங்களாகும் படம் பார்க்கும் ரசிகர்களின் மனதை கதையோடு ஒன்றிப்போகவைக்க இந்த இரண்டுமே அத்தியாசியமானவை, அந்த வகையில் இந்த படத்தின் இசை அமைப்பாளர் விஜய் சித்தார்த் மற்றும் சவுண்ட் டிசைனர்ஸ் சச்சின்& ஹரி. ஒளிப்பதிவாளர் A.M எட்வின் சகாய் மற்றும் கலை இயக்குனர் டான் பாலா போன்றோரின் பங்களிப்பு அபாரமாக உள்ளது ,அதே போல எடிட்டர் வெங்கட் ராஜனும் படத்தின் விறுவிறுப்புக்கு பக்கபலமாய் இருந்துள்ளார் ,இவர்கள் எல்லாருமே இயக்குனர் தருண் தேஜாவின் கதைகளத்துக்கு உறுதுணையாய் நின்று , ஆங்கிலப்படங்களுக்கு நிகரான பட உருவாக்கத்துக்கு வழிவகுத்துள்ளார்கள் , இந்தப் படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என்.பிரசாத் தயாரித்துள்ளார்.
சிறந்த தொழில் நுட்பத்துடன் கூடிய ஹாரர் ஜானர் படமான இந்த அஸ்வின்ஸ் அனைத்து திரை ரசிகர்களையும் நிச்சயம் கவரும்
