Wednesday, April 22

கலை இயக்குனர் R.ராதா காலமானார்

கலை இயக்குனர் R.ராதா காலமானார்


எம். ஜி.ஆர்.சிவாஜி, ஜெயலலிதா, ஜெய்சங்கர் முத்துராமன், சிவக்குமார் / கமலஹாசன் /ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர் நடிகையர் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் R.ராதா . அவர் 14.2.2023 விடியற்காலை 3.30 மணி அளவில் காலமானார் உடல்நலம் சரியில்லாமல் இருந்த காரணத்தினால் கீழ்பாக்கம்மடுத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு வயது 88 லீலாவதி (74 )என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர் இவர்முக்தா சீனிவாசன், SP முத்துராமன் போன்ற பல இயக்குனர்களின் படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

இவர் பணியாற்றிய படங்கள் எம்.ஜி.ஆர். நடித்த ஆனந்த ஜோதி, தெய்வத்தாய் , அடிமைப்பெண் படங்களிலும் சிவாஜி நடித்த கீழ்வானம் சிவக்கும், பரீட்சைக்கு நேரமாச்சு, ஜெயலலிதா முத்துராமன் நடித்த சூர்யகாந்தி, கமலஹாசன் நடித்த சிம்லா ஸ்பெஷல், சிங்காரவேலன், ரஜினிகாந்த் நடித்த பில்லா, சிவப்புச்சூரியன், நான் சிவப்பு மனிதன், பொல்லாதவன், போன்ற |75 க்கு மேற்பட்ட படங்கள் கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். இவர் ஆர்ட்டைரக்டர் அங்கமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றியவர்

Spread the love