திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிமாபட்டி என்னும் கிராமத்தில் காதல் திருமணமோ அல்லது சாதிவிட்டு சாதி மாறி திருமணம் செய்யதாலோ ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப்படுவார்கள், இந்த சூழலில் அந்த கிராமத்து சேர்ந்த கதையின் நாயகன் சத்திவேல் ( பவன்), வேறு ஊரைச் சேர்ந்த கதையின் நாயகி கவிதாவை (மேக்னா எலன்) காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார் , அதன்பின் என்ன நடந்தது ?என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

சக்திவேல் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் பவன்,மாறுபட்ட உணர்வுகளை சித்தரிக்கும் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார்,கவிதா என்னும் கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மேக்னா எலன்,நிறைவாக நடித்துள்ளார் நாயகனின் தந்தை குழந்தைவேலுவாக அருமையாக நடித்திருக்கும் சார்லி, ரசிகர்களின் மனதில் தனி இடம் பெறுகிறார் ,மேலும் , தங்கையின் காதலை எதிர்க்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிர்லா போஸ் ,அழகு போன்றவர்களின் பாத்திர படைப்புகளும் நன்றாக உள்ளது.
.இன்றைய காலகட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சாதிய உணர்வுகளை சித்தரிக்கும் விதமான கதைக்கேற்ற காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குநர் ரமேஷ் கந்தசாமி.
இந்த படத்தின் இசை மணி அமுதவன் ,இவரது இசையில் அந்தோணி தாசன் பாடியுள்ள ‘வண்ண வண்ண எறகு நீ’ என்னும் பாடல் ரசிக்கும்படி உள்ளது. ஒளிப்பதிவாளர் ஜெ பி மேனின் கேமராகிராமீய வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த மக்களை பற்றி சிறப்பாக பதிவு செய்துள்ளது..
மொத்தத்தில், இந்த ‘அரிமாபட்டி சக்திவேல்’ என்னதான் ஒரு பக்கம் அறிவியல் வளர்ச்சி விண்ணை முட்டிக்கொண்டு இருந்தாலும் பல கிராமங்களில் இன்னமும் வலுவாக வேர் ஊன்றி உள்ள சாதிய வன்மத்தை பற்றி பேசும்படமாக அமைந்துள்ளது.
