Friday, April 17

’அறம் செய்’ -திரைப்பட விமர்சனம்

பாலு எஸ்.வைத்தியநாதன் நடித்து இயக்கி உள்ள படம் “அறம் செய்”.இந்தப்படத்தில் ஜீவா, மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
தான் படிக்கின்ற அரசு மருத்துக்கல்லூரியை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்வதை எதிர்த்து கதையின் நாயகன் பாலு எஸ். வைத்யநாதன் சக மாணவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்துகிறார் ,நாயகி அஞ்சனா கீர்த்தி நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதனால்,அவர்களுக்கு எதிர்ப்புகளும் மிரட்டலும் வருகிறது. இதனால் ஏற்படும் பலவிதமான இடையூறுகளை எதிர்த்து தங்களுடைய இலட்சியத்தில் உறுதியோடு நின்ற இவர்கள் அதில் வெற்றி கண்டார்களா ? என்பதுதான் இந்த “அறம் செய்” திரைப்படத்தின் படத்தின் மீதிக்கதை.

பாலு எஸ்.வைத்தியநாதன் இந்தப்படத்தின் நாயகனாக நடித்ததோடு, படத்தை இயக்கவும் செய்துள்ளார், நாயகி மேகாலி வழக்கமான திரை நாயகி பாத்திரத்தில் நடித்துள்ளார் ,பெரிய அளவில் இவருக்கு படத்தில் வேலை இல்லை ,குறிப்பிட்டு சொல்லக் கூடிய, கதாபாத்திரத்தில் ஜீவா நன்றாக நடித்துள்ளார், அஞ்சனா கீர்த்தி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தினை நன்றாக பயன்படுத்தி, குறை காண முடியாத வகையில் நடித்துள்ளார், மற்றும் ஜாக்குவார்தங்கம் , பயில்வான் ரெங்கநாதன், திருச்சி சாதனா என பிறரும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்பட்ட வகையில் நடித்துள்ளார்கள். பாலு எஸ் வைத்யநாதனின் கேமரா காட்சிகளுக்கு ஏற்ப சுழன்றுள்ளது, ஶ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம் .இவரை இன்னமும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம் .

இயக்குநர் பாலு எஸ் வைத்தியநாதன் சமூக கருத்துகளை மையமாக வைத்து தான் சொல்ல வந்த கதையினை திரைக்கதை ஆக்குவதில் இன்னுமும் மெனக்கட்டுஇருக்கவேண்டும், நீண்ட உரையாடல்களை தவிர்த்து, தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தி , புதிய பாணியில் காட்சிகளை அமைப்பதில் கவனம் செலுத்திஇருந்தால் படத்தின் தலைப்பை போலவே படமும் ரசிக்கவைத்திருக்கும் .

Spread the love