வனப்பகுதியில் இருக்கும் ரிசார்ட்டில் உள்ள ராணி பங்களா ஆண்டுகணக்கில் திறக்கப்படாமலேயே இருந்து வருகிறது அங்கு வரும் புது மேனேஜர் அதனை திறந்து விருந்து ஒன்றை அங்கு நடத்துகிறார். அந்த விருந்தில் பலரும் கலந்து கொள்ளும் சமயத்தில் இரண்டு பெண்கள் மாயமாகிவிட, அதை பற்றி விசாரிக்க வரும் காவல் துறை அதிகாரியான சத்யராஜ் அங்கு வந்து விசாரணை நடத்தும் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகிறது, இறுதியில் என்ன நடக்கிறது? போலீஸ் அதிகாரியான சத்யராஜின் பின்புலம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீபதி கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை மிகை இல்லாமல் கொடுத்து நன்கு நடித்துள்ளார். நாயகி நியா ஒரு பாடல்காட்சியிலும் ,மற்றும் சில காட்சிகளிலும் நிறைவாக நடித்திருக்கிறார். மேலும் அங்காடித்தெரு மகேஷ், அப்புக்குட்டி, கே.சி.பிரபாத், ரெய்னா காரத் ஆகியோரும் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தியுள்ளார்கள் மற்றும் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் மொட்டை தலையுடன் மீண்டும் வில்லனாக நடித்திருக்கும் சத்யராஜ் அசத்தலாக நடித்துள்ளார். ஆனால், அவருக்கு ஏற்ற வகையில் இன்னுமும் காட்சிகளை அமைத்திருக்கலாம்,
கருந்தேள் ராஜேஷின் கதைக்கு நாயகன் ஸ்ரீபதி திரைக்கதை அமைத்திருக்கிறார்,கு.கார்த்தியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை போன்றவை குறைவின்றி அமைந்துள்ளது. மோகன் டச்சு ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார்,மீண்டும் வில்லனாக சத்யராஜை நடிக்க வைத்திருக்கும் முயற்சியில் இன்னுமும் அவரது கதாபாத்திரத்துக்கும் காட்சிகளுக்கும் வலு சேர்த்திருந்தால் அது அவருடைய மீண்டும் வில்லன் என்ற பரிமாணத்துக்கு பெரும் பலம் கொடுத்திருக்கும் .
மொத்தத்தில் ,இன்னுமும் கவனம் செலுத்தியிருந்தால் இந்த ‘அங்காரகன்’ சத்யராஜ் ரசிகர்களை மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கும்.