சென்னையில் உணவு விநியோகம் செய்கின்ற பணியில் இருக்கும் திருமேனிக்கு ( அர்ஜுன் தாஸ்), ஓசிடி பிரச்சினை இருக்கிறது , அவருக்கு தன்னை ஏளனப்படுத்த்துபவர்களை எல்லாம் கொலை செய்வது போல் உள்ளுணர்வு எண்ணம் ஏற்படுகிறது இந்த நிலையில் உணவு விநியோகம் செய்ய செல்லுமிடத்தில் அங்கு பணிபுரியும் சுப்புலட்சுமி உடன் ஏற்படும் (துஷாரா விஜயன்) தொடர்பு காதலில் முடிகிறது, இது திருமேனிக்கு மனதளவில் மாற்றங்களை தருகிறது , ஆனால் ஒருநாள் சுப்புலட்சுமியின் முதலாளி இறந்து விடுகிறார் ,இறந்த முதலாளி அம்மாவின் வாரிசுகளுக்கும், காவல்துறைக்கும் அவரது இறப்பில் ஏற்படும் சந்தேகத்தினால் அந்த கொலைப்பழி சுப்புலட்சுமி மற்றும் திருமேனியின் மீது விழுகிறது. இதன் பின் அவர்கள் அந்த கொலைப்பழியிருந்து மீண்டார்களா? – என்பதே படத்தின் திரைக்கதை.

அன்றாடம் நம்சமூக வாழ்க்கையில் நாம் பார்க்கும் உணவு விநியோகம் செய்கின்ற பணியில் இருக்கும் இளைஞராகவும் ,அது சமயம் மன அழுத்தத்தினால் போராடுபவராகவும் நன்கு நடித்து திருமேனி என்னும் கதாபாத்திரத்த்தில் தன் பங்கை அழுத்தமாக பதிவு செய்து நன்கு நடித்துள்ளார் அர்ஜுன்தாஸ்.

சுப்புலட்சுமி என்னும் கதாபாத்திரத்தில் இன்றய சமூகத்தின் எளிய பெண்நை உருவகப்படுத்தி இயல்பாக நடித்துள்ளார் துஷாரா விஜயன் மேலும் காளி வெங்கட்., வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அர்ஜுன் சிதம்பரம், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலரும் தாங்கள் ஏற்ற கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடிப்பை கொடுத்துள்ளார்கள்.
‘வெயில், அங்காடித்தெரு என தொடர்ந்து சாமான்ய மனிதர்களின் வாழ்வியலை, அவர்கள் சார்ந்துள்ள சமூகம் அவர்களுக்கு தரும் வலிகளை படமாக்கி வரும் இயக்குநர் வசந்தபாலன் மீண்டும் அதே வழியில் பயணித்து இந்த அநீதிபடத்தையும் படைத்துள்ளார்.
.ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும், பாடல்களும் படத்துக்கு மேலும் பலம் சேர்க்கின்றன .எட்வின்சகாயின் ஒளிப்பதிவும், ரவிக்குமாரின் படத்தொகுப்பும் இயக்குனரின் எண்ண ஓட்டத்தில் இணைந்து பயணித்து நற்ப ங்களிப்பை வழங்கியுள்ளது.
சாமான்ய மக்களின் வலிகளையும், அவர்களது உணர்வு போராட்டங்களையும் பதிவு செய்துள்ள இந்த அநீதி, நீதியின் குரலாய் ஒலித்துள்ளதை யாவரும் பார்க்கலாம்.
