விழித்திறனில் சவால் கொண்ட பியானோ கலைஞர் கிருஷ்ணா (பிரஷாந்த்), ஜூலியின் ( ப்ரியா ஆனந்த்) உணவகத்தில் பியானோ இசைக்கும் பணிக்குச் செல்கிறார். இந்த சூழலில் கிருஷ்ணாவின் இசை ரசிகரான கார்த்திக் (கார்த்திக்), தனது திருமண நாளில் தன் மனைவிக்காக(சிம்ரன் ) தன் வீட்டில் கிருஷ்ணாவை பியானோ வாசிக்க சொல்கிறார் அதன்படி , அவரின் வீட்டுக்குச் செல்லும் கிருஷ்ணாவுக்கு அதிர்ச்சி தரும் சம்பவத்தை சந்துக்கும் நிலை ஏற்படுகிறது இதன் பிறகு அவரது வாழ்வில் நடப்பவை என்ன ?என்பதுதான் மீதிக்கதை.
டாப் ஸ்டார் பிரஷாந்த்தின் மறுபிரவேசம் சிறப்பான கதாபாத்திர படைப்புடன் நிகழ்ந்துள்ளது. இது அவருக்கு 50ஆவது படம். தொடர்ந்து அவரை திரையில் பார்க்கும் வாய்ப்பை இந்த படம் தரும் என்று நம்பலாம் .அனைத்து பரிமாணிங்களிலும் தன் திறனை பிரசாந்த் இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளார் .
பிரசாந்திற்கு பிறகு படம்பார்க்கும் ரசிகர்களை பெரிதும் கவர்பவர் சிம்ரன் தான்புதிய பரிமாணத்தில் இவரது நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது ,இப்படம் இவர் பிரசாத்துடன் நடிக்கும் ஏழாவது திரைப்படமாம். இதுமேலும் கார்த்திக் , சமுத்திரக்கனி,பிரியா ஆனந்த், ஊர்வசி, யோகிபாபு கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மனோபாலா, பெசன்ட் ரவி, என பலரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்கங்களின் தன்மைக்கு ஏற்ப நன்கு நடித்திருக்கிறார்கள்.
ரவி யாதவின் ஒளிப்பதிவும் ,சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்தின் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் நன்கு அமைக்கப்பட்டுள்ளது பெற்றுள்ளது கிரைம் திரில்லர் ஜானரிலான இப்படத்தை தியாகராஜன் இயக்கியுள்ளார் .பிரசாந்துடன் இவர் முன்பு பணிபுரிந்திருந்த படங்களை விட புதிய பரிமாணத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
`அந்தகன்’ -வேகமும் விவேகமும் நிறைந்தவன்