Thursday, April 23

அந்த 7 நாட்கள்- திரை விமர்சனம்

அஜிதேஜ், ஸ்ரீ ஸ்வேதா நமோ நாராயணா, கே பாக்யராஜ் மற்றும் பலர் நடிப்பில், எம் சுந்தர் இயக்கியுள்ள திரைப்படம் அந்த ஏழு நாட்கள், இந்த படத்துக்கு , இசை சச்சின் சுந்தர், ஒளிப்பதிவு கோபிநாத் துரை.
கதையின் நாயகனான அஜிதேஜ் ஒரு வானவியல் ஆராய்ச்சி மாணவராக உள்ளார் ,அவர் சூரிய கிரகணம் குறித்த ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பொழுது, அவருக்கு ஒரு அதிசயமான சக்தி ஆற்றல் ஒன்று கிடைக்கிறது, அவர் ஒருவருடைய கண்களையே பார்த்த மாத்திரத்தில் அவர்கள் எப்பொழுது மரணமடைய போகிறார் என்பதை அவரால் அறிந்து கொள்ள முடிகிறது, இந்த சக்தி ஆற்றல் படைத்த அஜிதேஜ் ,தன்னுடைய காதலி ஸ்ரீ ஸ்வேதாவின் கண்களை பார்க்கும் பொழுது அவர் இன்னும் ஏழு நாட்களில் இறக்கப் போகிறார் என்பதையும் அவரால் அறிந்து கொள்ள முடிகிறது இதன்பின் அஜிதேஜால் தன் காதலி ஸ்வேதாவை காப்பாற்ற முடிந்ததா என்பது தான் படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாக நடித்துள்ள அஜிதேஜ், தன்னுடைய காதல் நாயகியை காப்பாற்ற துடிக்கும் இளம் காதலனாக, தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி புதுமுக நடிகர் என்பது தெரியாத வகையில் நன்கு நடித்துள்ளார் .அதேபோல கதையின் நாயகியாக நடித்துள்ள ஸ்ரீ ஸ்வேதாவும் தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப இயல்பாக நடித்துள்ளார், .மேலும் நமோ நாராயணன் ,கே பாக்யராஜ் போன்றவர்களின் கதாபாத்திரங்களும் அவனை ஏற்று. அவர்கள் நன்கு நடித்து இருப்பதும் இயல்பாக உள்ளது .

ஒளிப்பதிவாளர் கோபிநாத் துரையை பொறுத்தவரை கதைக்கும் ,காட்சிகளுக்கும் பொருத்தமான காட்சி பதிவை தன்னுடைய ஒளிப்பதிவு மூலம் நன்றாக வழங்கியுள்ளார், அதேபோல இசையமைப்பாளர் சச்சின் சுந்தர் இசையில் பாடல்கள் பார்ப்பதற்கும் ,கேட்பதற்கும் இனிமையாகவும், பின்னணி இசை காட்சிகளுக்கு இணக்கமாகவும் உள்ள வகையில் நன்கு அமைந்துள்ளது, காதலை களமாக கொண்டு அமைந்த படத்துக்கு நேர்த்தியான திரைக்கதையுடன் படமாக்கி உள்ளார் இயக்குனர் எம். சுந்தர் .அதிலும் குறிப்பாக தற்பொழுது சமுதாயத்தில் பரவலாக பேசப்பட்டு கொண்டிருக்கும் தெரு நாய்கள் கடிப்பது சம்பந்தமான பிரச்சினையையும் கையில் எடுத்திருப்பது தற்போதைய சமூக காலகட்டத்திற்கு ஏற்ப ஒத்துப் போகின்றது.

காதல் – த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த அந்த 7 நாட்கள் நல்லதொரு பொழுதுபோக்கு படம் .

Spread the love