இந்திய ராணுவத்தில் சேவை செய்து நாட்டிற்காக, தன் இன்னுயிரை நீத்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன்,அவரது வாழ்வியல் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம்தான் ‘அமரன்’.
.முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) என்னும் இளைஞன், தாம்பரத்தைச் சேர்ந்தவர் ராணுவத்தில் சேரும் அவர் லெப்டினன்ட் , கேப்டன் என் உயர்ந்து , காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட 44-வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் குழுவில் இணைகிறார். இதற்க்கு முன்பாக முகுந்த், இந்து ரெபேக்கா வர்க்கீஸை (சாய் பல்லவி) காதலிக்க, அவர்களுடைய காதலுக்கு இந்துவின் பெற்றோர் சம்மதிக்க மறுக்கிறார்கள் , பின்னர் அவர்களை முகுந்த் சமாதானம் செய்தபின், இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. இப்படிபட்ட முகுந்த்-இந்துவின் காதல் தருணங்கள்,காஷ்மீரில் தீவிரவாதிகளை வீழ்த்தும் அவரது வீரதீர போராட்ட நிகழ்வுகள்,இறுதியில் தாய் நாட்டை பாதுகாக்கும் களப்பணியில் முகுந்தின் வீரமரணம்.என அவரது வாழ்க்கையில் நடைபெறும் பல சம்பவங்களை, அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸின் பார்வையில் சொல்லும் விதமாக இந்த படத்தின் கதை செல்லுகிறது.
‘பயோபிக்’ படங்களில், அதுவும் சமகால நாயகர்களின் படங்களில் நடிக்கும் போது ,அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகருக்கு, கதாபாத்திரத்தின் தோற்றத்தினையும் ,உடல்மொழியினையும் பற்றிய பொறுப்பும், அதை வடிவமைக்கும் இயக்குனருக்கு அந்த கதாபாத்திரத்தினை பற்றி விரிவான தகவல் திரட்டுகளும் தேவை, அதை நாயகன் சிவகார்த்திகேயனும் ,இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் நேர்த்தியாக செய்துள்ளார்கள்.

முகுந்த் ஆக நடித்துள்ள நாயகன் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் ,அவரது திரை பயணத்தில் நிச்சயம் முக்கியமான படமாக அமையும், அவர் இதற்க்கு முன்பே சில படங்களில் ஆக்ஷன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும், இந்த படத்தில் அவரது புதிய பரிமாணம், அவர் .நடிப்பின் வெளிப்பாட்டை புதிய கோணத்தில் பரிமளிக்க வைத்துள்ளது. நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நாயகியாக சாய் பல்லவி, இந்து ரெபக்கா வர்கீஸ் என்னும் கதாபாத்திரத்தில் அவர் நிறைவான நடிப்பை வெளிப்படித்தியுள்ளார்..
படத்தின் காட்சிகளுக்கு மேலும் உயிரோட்டத்தினை கொடுத்திருப்பது ஜி.வி.பிரகாசிஷின் இசையும், சி.எச்.சாயின் ஒளிப்பதிவும் என்றே சொல்லலாம் ,இவை இரண்டும் .அன்பும் நேசமும் நிறைத்த காதலையும், பாசத்தையும் அழகாக பதிவு செய்துள்ளதை போலவே ,அதிரடி ஆக்ஷனிலும் விறுவிறுப்பாய் கதைக்களம் பயணிக்க பெரிதும் உதவியுள்ளன.
இராணுவ வீரர்களின் வாழ்வியலையும் அவர்களது உணர்வு போராட்டங்களையும் நேர்த்தியான திரைக்கதையில், பொருத்தமான நடிகர்களை கொண்டு நிறைவான படமாக உருவாகியுள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
மொத்தத்தில் அமரன் வீரமும் ,காதலும் செறிந்த மரியாதை மிக்கவன்.
