Thursday, April 2

அக்யூஸ்ட்- திரைவிமர்சனம்

பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார்.

கொலை வழக்கு குற்றவாளியான கணக்கு என்று அழைக்கப்படும் நபரை புழல் சிறையிலிருந்து சேலத்திற்கு கொண்டு செல்கிறார்கள் ,அவரை அழைத்துக் கொண்டு செல்லும் காவலர்கள் குழுவில் வேந்தன் என்னும் காவலரும் உள்ளார் ,அப்படி கொண்டு செல்லப்படும் வழியிலேயே கணக்கை தீர்த்து கட்டுவதற்கு ஒரு கூலிப்படையும் முயற்சி செய்கிறது, அதுமட்டுமல்லாது கணக்கை என்கவுண்டர் செய்வதற்கு காவல்துறை தரப்பிலும் திட்டமிடப்படுகிறது ,ஆனால் வேந்தன் கணக்கை பாதுகாப்பாக நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று விட வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறார், இந்த கணக்கு யார் ?அவரது பின்புலம் என்ன ?கணக்கை காவல்துறையே தீர்த்துக்கட்ட திட்டமிடுவது ஏன் ?இறுதியில் கணக்கை, காவலர் வேந்தனால் பாதுகாப்பாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிந்ததா? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை.

கணக்கு என்ற கதாபாத்திரத்தில் உதயா நடித்திருக்கிறார் ,ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு கனமான ஒரு கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்துள்ளார். கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் தோற்ற பொலிவும், உடல் மொழியும் கொண்டு நன்கு நடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக போலீஸ் கான்ஸ்டபிளாக வேந்தன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜ்மல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ப இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். மலர் என்னும் கதாபாத்திரத்தில் நாயகியாக ஜான்விகா கலாகேரி நடித்துள்ளார், இவரும் லாட்ஜ் ஓனர் ராமாநாயுடுவாக நடித்துள்ள யோகி பாபுவும், அவரவர் கதாபாத்திரங்களுக்கு இணக்கமான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கும், படம் முழுவதும் கதையோட்டத்துடன் பயணிக்கும், பின்னணி இசைக்கும் இசையமைப்பாளர் நவீன் பாலகுமாரனின் பங்களிப்பு நன்றாக உள்ளது. ஒளிப்பதிவாளர் மருதநாயகம் ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக பதிவு செய்துள்ளார். கமர்சியல் ஆக்சன் கதைக்கு ஏற்ற விறுவிறுப்பை படத்தொகுப்பாளர் கே எல் பிரவீண் தனது கைவண்ணத்தில் கொடுத்திருக்கிறார்.

கதாபாத்திரங்களுக்கு ஏற்றதொரு நட்சத்திர தேர்வோடு ,எடுத்துக்கொண்ட கதைக்கு, இணக்கமான திரைக்கதை காட்சிகளையும் நேர்த்தியாக இணைத்து, கமர்சியல் ,ஆக்சன், எமோஷன் ,என்டர்டைன்மென்ட் போன்றவை நிறைந்த திரைப்படமாக இந்த படத்தினை இயக்குனர் பிரபு சீனிவாஸ் இயக்கியுள்ளார்..

Spread the love