கடலும் கடல் சார்ந்த இடத்தில் உருவாகும் காதலையும் அதற்குண்டான எதிர்ப்பினையும் கதை நிகழ் சூழலுக்கு பொருத்தமான தலைப்பினையும் கொண்டு உருவாகியுள்ளது இந்த ’ஆழி’.
படகு மெக்கானிக்கான சரத்குமார் அந்த வேலையோடு போதைப் பொருள்களை விற்பனை செய்வது ஆயுதங்களை கடத்துவது போன்ற சட்டவிரோத செயல்களையும் செய்து வருகிறார், இவருடைய அன்பான மகள் தேவிகா சதீஷ் ,,அவர் தன்னுடன் படிக்கும் சக மாணவன் இந்திரஜித் ஜெகதீத்தை காதலிக்கிறார் மகளின் காதலை அறியும் சரத்குமார் மகளின் காதலன் இந்திரஜித் ஜெகதீத்தை ஆழ் கடலுக்கு கடத்திச் சென்று விடுகிறார், அங்கு வைத்து அவரை கொலை செய்யவும் சரத்குமார் திட்டமிடுகிறார் .சரத்குமாரிடமிருந்து இந்திரஜித் ஜெகஜித்தால் தப்பிக்க முடிந்ததா ?இல்லையா?என்பதுதான் ’ஆழி’ படத்தின் மீதி கதை.
மூர்த்தி என்னும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் சரத்குமார் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .பாசமும்,வில்லத்தனமும் கலந்த மாறுபட்ட பரிமாணங்களில் சரத்குமார் தன் அனுபவ நடிப்பினை படம் முழுவதும் வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றும் ஒரு முக்கியமான இளம் நாயகனாக இந்திரஜித் ஜெகதி நடித்துள்ளார், அவர் சரத்குமாரிடமிருந்து போராடி தப்பிக்க முயலும் காட்சிகளில் நன்கு நடித்துள்ளார். சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் தேவிகா சதீஷ் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார் மேலும் வையாபுரி, பிர்லா போஸ் ,தாமரைச்செல்வி என பலரும் அவரவர் கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள் .

ஜாசி கிப்ட்டின் இசையில் பாடல்கள் பெரிதாக மனதை கவரவில்லை என்றாலும், வில்லியும் பிரான்சிசின் பின்னணி இசை, திரைக்கதையின் காட்சிகளுக்கு பக்க பலமாக அமைந்து உள்ளது .ரசூல் பூக்குட்டியின் ஒலி வடிவமைப்பு கதை நிகழும் சூழலை ,நேர்த்தியான முறையில் பதிவு செய்துள்ளது .கடல், கடல் சார்ந்த பகுதிகள், படகு என பயணிக்கும் கதைக்கேற்ற வகையில் ஒளி அமைப்பினை சிறப்புடன் அமைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஆனந்த் N நாயர். கடல் சார்ந்த வாழ்வியலில் நடக்கும் கதை களத்தில் ,தந்தை- மகள் காதலன்- காதலி பாசப்பிணைப்பை திரைக்கதையாக்கி படமாக்கி இயக்கி உள்ளார் இயக்குனர் மாதவ் ராமதாசன்.
மொத்தத்தில் இந்த ’ஆழி’ஆழ்கடலின் அமைதியையும் , ஆர்ப்பரிக்கும் அலைகளையும் ஒருங்கே கொண்டுள்ளது.
