கதையின் நாயகன் விதார்த் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் வித்தார்த்தின் தந்தை சார்லி, விதார்த்துக்கு ஒரு ஆட்டோமேட்டிக் கார் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஆசை ஏற்படுகிறது ஆனால் அதற்க்கு அவருக்கு 10 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. அந்த பணம் இல்லாததால் அவரது கனவு நனவாகாமல் உள்ளது வித்தாரத்தின் தந்தை சார்லி. 10 லட்சம் ரூபாய் பணத்தை தயார் செய்து எடுத்து வரும்போது சிலரால் கொலை செய்யப்படுவதோடு அவரது பணமும் கொள்ளை போகின்றது ,பிறகு ஒரு முறை பைக்கில் வரும் ஒரு கும்பல் ஒருநபரை அதன் பின் அடித்துவிட்டு அவரிடம் இருந்த பணத்தை எடுத்துச் செல்கின்றனர். அதன் பின் விதார்த்துக்கு தன தந்தை சார்லிக்கும் இப்படித்தான் நடந்திருக்கும் என்பதை புரிந்துகொண்டு வில்லனை தேட ஆரம்பிக்கிறார்.அப்பாவின் கொலைக்கு காரணமானவர்களை விதார்த் கண்டுபிடித்தாரா இல்லையா? கடைசியில் ஆட்டோமேட்டிக் கார் உருவாக்கும்அவரது கனவு நனவானதா? என்பதுதான் இந்த படத்தின் எஞ்சிய கதை
பல சிறப்பான கதைகளில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திவரும் விதார்த் இந்த படத்திலும் கதையின் நாயகனாய் திறம்பட நடித்துள்ளார்பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தாலும் அரித்த சில படங்களில் தன குணச்சித்திர நடிப்பை சார்லி வழங்கியிருப்பார் அந்த வரிசையில் இந்த பட த்திலும் அப்பா கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.
நாயகியாக நடித்துள்ள ஷிரிதா ராவ்விக்னேஷ், வம்சி கிருஷ்ணா என படத்தில் நடித்துள்ள அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு தேவையான அளவிற்கு நடிப்பை வழங்கியுள்ளனர்.புதுமையான கதையை எடுத்துக்குக்கொண்டு படமாக்கியுள்ள இயக்குனர் கே எல் கண்ணனுக்கு,அஸ்வின் ஹேமந்தின் இசையும், கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளது.