Tuesday, April 28

ஆலகாலம் -திரைப்பட விமர்சனம்

குடியால் கணவனை பறி கொடுத்த பின் தன் மகனை படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தில் உள்ள தாய் ஈஸ்வரி ராவ், இலட்சியத்தோடு வளர்த்தெடுக்கப்படும் மகனாக ஜெயகிருஷ்ணா,அந்த மகனை படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன் உள்ள அவரது தாய் தன் மகனை மிகுந்த சிரமத்துடன் படிக்க வைத்து நகரத்தில் உள்ள கல்லூரியில் படிக்க அனுப்புகிறார்.அங்கு ஜெய கிருஷ்ணாவும் அவரது சக மாணவி சாந்தினியும் காதல் வசப்படுகிறார்கள், ஒரு கட்டத்தில் ஜெயகிருஷ்ணாவும் குடிக்க ஆரம்பித்து பின் அந்த குடியால் , அவனும் அவனை சார்ந்தவர்களும் பட்ட இன்னல்கள் என்ன என்பதே ஆலகாலம் படத்தின் கதை.

ஜெய கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கி உள்ளதோடு கதையின் நாயகனாக நடித்தும் உள்ளார் அதோடு இந்த படத்தை தயாரித்தும் உள்ளார் ,கதையின் நாயகனாக,ஜெயகிருஷ்ணாவும் , நாயகியாக சாந்தினியும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு மிக பொருத்தமாக நன்கு நடித்துள்ளார்கள். அம்மாவாக நடித்துள்ள ஈஸ்வரி ராவ் தாய்மையின் மேன்மையினை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படித்தியுள்ளார். மேலும் இவர்களுடன் தீபா, பாபா பாஸ்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர்மனோகர் என பலரும் நம் கண்முன்னே காணும் பல அசல் கதாபாத்திரங்களை நினைவூட்டும் வகையில் நன்கு நடித்துள்ளார்கள்.

காதலும், பாசமும் நிறைந்த இந்த குடும்பப் படத்துக்கு ஏற்ற வகையில் இசைஅமைப்பாளர் – என்.ஆர்.ரகுநந்தனும், ஒளிப்பதிவாளர் கா. சத்தியராஜூம் பணியாற்றி, இயக்குனருக்கு பக்க பலமாய் உள்ளார்கள்.

சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை தெளிவாக சொல்லும் வண்ணமும், அதே சமயத்தில் பிரச்சார படம் போல அமைந்து விடாமலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது .

காலங்காலமாய் போதை மூலமாக பாதை மாறும் பல குடும்பங்களின் வலியினை சொல்லும் இந்த ஆலகாலம் இன்றைய குடிமகன்களுக்கு அறிவை போதிக்கும் ஆலமரம் .

Spread the love