Wednesday, April 22

காதலும், மோதலும் சென்டிமென்ட்டும் கலந்த ஃபேமிலி படமாக உருவாகியுள்ள உலகநாதன் படத்தை A. ஆதவன் இயக்கியிருக்கிறார்

ஆதி photos நிறுவனம் சார்பில் A.D.ஆதிநாடார் தயாரித்த முதல் படம் விருது. இந்தப் படம் வெளிவந்து தியேட்டர்களில் 40 நாள் வெற்றிகரமாக ஓடி லாபத்தை கொடுத்தது,இப்போது உலகநாதன் என்ற பெயரில் இரண்டாவது படத்தையும் தயாரித்திருக்கிறார்கள் .கிராமிய கதையமைப்போடு காதலும், மோதலும் சென்டிமென்ட்டும் கலந்த ஃபேமிலி படமாக உருவாக்கியிருக்கிறார்கள் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மதுரை, மற்றும் இராஜபாளையத்தைச் சுற்றியுள்ள அழகான பகுதிகளில் நடந்திருக்கிறது.

விருது படத்தை இயக்கிய A. ஆதவன் இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். விருது படத்தில் கதாநாயகனாக நடித்த அட்சயன் இந்தப் படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.நடிகர் கஞ்சா கருப்பு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார்., ஹீரோ அட்சயனுக்கு ஜோடியாக யோகதர்சினி, கிரேட்டா இரண்டு புதுமுக நாயகிகளும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகன் சிலம்பம் பயிற்சி முழுமையாக பெற்றவர் என்பதால் சிலம்பம் இடம்பெறும் சண்டைக்காட்சிகளில் அவரே டூப் இல்லாமல் நடித்து படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்க வந்தவர்கள் அத்தனைப் பேரின் கைத்தட்டல்களையும், பாராட்டுக்களையும்பெற்றி ருக்கிறார். ஹீரோவின்அம்மாவாக விஜய் டி.வி. புகழ் சசிகலா நடித்திருக்கிறார். வில்லனாக புதுமுக நடிகர் கடற்கரை நடித்திருக்கிறார்.

இசையை சார்லஸ் தனா அமைத்திருக்கிறார். பாடல்களை: சார்லஸ் தனா, ராமநாதன் . எழுதியிருக்கிறார்கள்
ஒளிப்பதிவு: கணேஷ் சாய் பிரசாத், நடனம்: முருகேசன், மேக்கப் காஸ்டியூம்ஸ் : S .பிரபாவதி,
தயாரிப்பு : A.D. ஆதிநாடார்.
கதை, திரைக்கதை, வசனம், சண்டைப் பயிற்சி, எடிட்டிங், இயக்கம். A. ஆதவன்
– துளசி பப்ளிசிட்டீஸ்
9941594843 – 9500024843(W)

Spread the love