Thursday, July 16

தலைநகரம் 2 – திரைவிமர்சனம்

சுராஜ் இயக்கத்தில்  2006-ஆம் ஆண்டு வெளிவந்த ‘தலைநகரம்’ படம் நல்ல வெற்றியை பெற்றது . அதுவரை வெற்றி இயக்குனராகவே திரை உலகில்  வலம் வந்து கொண்டிருந்த சுந்தர்.சி அந்த படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுமாகி நடிகராகவும் வலம் வர துவங்கினார் அந்த திரைப் படத்தில் அவர் ரைட் என்ற ரவுடி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார், அந்த கதாபாத்திரத்தின் நீட்சியாகவே இந்த தலைநகரம் 2 படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சென்னை மாநகரத்தை மூன்றாக பிரித்து நஞ்சுண்டா (பிரபாகர்), வம்சி (விஷால் ராஜன்), மாறன் (ஜெய்ஸ் ஜோஸ்) என்ற மூன்று ரவுடிகளும் அதிகார ஆளுமை செய்து வருகின்றார்கள் அவர்கள் மூன்று பேருக்குள்ளும் ,தங்களுக்குள் முதல் இடத்தை இடத்தை பிடிக்கும் அதிகார போட்டி ஏற்படுகிறது ,இதற்காக ஒருவருக்கொருவர் பழிவாங்கும் திட்டங்களை தீட்டுகிறார்கள்,முன்னாள் ரவுடியாக இருந்த போதிலும், தற்போது அமைதியான முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ரைட் (சுந்தர்.சி) அப்துல் மாலிக்குடன் (தம்பி ராமையா) சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.ரவுடி விஷால் ராஜன் உடன் இருக்கும் நடிகை பாலக் லால்வானி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். அவரை கடத்தியது தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளினால் ரவுடிகள் மூவருடன் ரைட்டுக்கு பிரச்சினை வருகிறது.மூவருமே அவரை தீர்த்துக் கட்டவும் திட்டமிட்டு வருகின்றனர். அதன்பிறகு இந்த மூவரையும் எதிர்க்க மீண்டும் ரவுடியாக களம் இறங்குகிறார் ரைட் , அவர்களிடம் இருந்து ரைட் தப்பித்தாரா? தலைநகரத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றியது யார்? என்பதே ‘தலைநகரம் 2’ படத்தின் மீதி கதை ஆகும் .இந்த படத்தில் கதையின் நாயகனாய் நடித்துள்ள சுந்தர் சி ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார், நடிகையின் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாலக் லால்வானி தன்னுடைய அழகான தோற்றத்திலும், நடிப்பிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்,இந்த படத்தில் அப்துல் மாலிக் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தம்பி ராமையா மற்றும் அவரது மகளாக வரும் ஆயிரா போன்றோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தின் தன்மைக்கேற்ப ஏற்ப நன்கு நடித்துள்ளார்கள்

முகவரி’, தொட்டி ஜெயா’ போன்ற படங்களின் இயக்குனர் V.Z. துரை இந்த படத்தை விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்த ,முழுவதுவமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார், ஜிப்ரானின்பின்ணனி இசையும், இ.கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும் ஆக்சன் படங்களுக்கு தேவையான அளவுக்கு அமைந்து இயக்குனரின் காட்சிவடிவங்களுக்கு துணை நின்றுள்ளன

ஆக்க்ஷன் அதிரடி படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த தலைநகரத்தை மிகவும் பிடிக்கும்.

Spread the love