Wednesday, May 6

பாயும் ஒளி நீ எனக்கு -விமர்சனம்

மகாகவி பாரதியாரின் வரிகளை தலைப்பாய் கொண்டுள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு வாணி போஜன், தனஞ்செயா, வேல ராமமூர்த்தி ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா ஆகியோருடன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அரவிந்த் (விக்ரம் பிரபு).இளம் வயதில் நடந்த விபத்தின் காரணமாக குறைந்த ஒளியில் பார்க்க முடியாத நிலையில் வாழும்  அரவிந்த் (விக்ரம் பிரபு) தன்னுடைய தொழில் , குடும்பம், நண்பர்களுடன் இருக்கும் சூழ்நிலையில், ஒருநாள் இரவில் சாலையில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிக்கும் ரௌவுடிகளிடமிருந்து அந்த பெண்ணை காப்பாற்றுகிறார் ,இதன் எதிர் விளைவாக ரௌடிகளின் கூட்டம் அவரை பழிவாங்க முற்படுகிறது. மறுபுறம் அவரது சித்தப்பா கொலை செய்யப்படுகிறார். தன்னுடைய பார்வை குறைபாட்டுக்கு இடையில் அவர் தன்னுடைய எதிரிகளை எப்படி கண்டுபிடித்தார் ? என்பதே இப்படத்தின் மீதி கதை.

பார்வைக் குறைபாடு உள்ள நாயகனாய் விக்ரம் பிரபு நடித்துள்ளார் ஆக்ஷன் காட்சிகளில் நன்கு கவனம் எடுத்து சிறப்பாக நடித்துள்ளர்.மற்றும் நாயகியாய் வாணிபோஜன், மேலும் தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி போன்றோரும் நடித்துள்ளார்கள்.


இசையமைப்பாளர் சாகரின் பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு ஏற்ற வேகத்தினை அதிகரிக்கும் வகையில் உள்ளது, ஆனால் பாடல்களில் இன்னமும் கவனம் கொண்டு இருந்திருக்கலாம் என்ற வகையில் பாடல்கள் உள்ளது .ஆக்சன் காட்சிகளை சிறப்பாக்க ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரும், ஸ்டன்ட் இயக்குநர் தினேஷ் காசியும், படத்தொகுப்பாளர் சி.எஸ்.பிரேமும் நன்கு உழைத்துள்ளார்கள்,அவர்களுடைய உழைப்பு வீண் போகவில்லை.

கார்த்திக் அத்வைத் இந்த படத்தை இயக்கியுள்ளார், புதிய அருமையான அடிப்படை கதையினை தேர்வு செய்து இருந்தாலும் ,திரைக்கதையில் இன்னமும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ஒளி இன்னும் அதிக அளவுக்கு வீசி இருக்கும்.

Spread the love