Wednesday, May 6

அழகிய கண்ணே-விமர்சனம்

Esthell Entertainer நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R விஜயகுமார் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் “அழகிய கண்ணே”.

இன்பாவுக்கு (லியோ சிவகுமார்) சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற லட்சிய ஆசை நிறைய உண்டு , புரட்சி நாடகங்களை நடத்தி வரும் அவரும் எதிர் வீட்டில் உள்ள கஸ்தூரியும் (சஞ்சிதா ஷெட்டி), காதல் வசப்படுகிறர்கள் ,ஆனால் அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.அவர்களுடைய காதல், எதிர்ப்புகளுக்கு இடையே திருமணத்தில் முடிகிறது, இந்த சூழ்நிலையில் இயக்குநர் பிரபு சாலமனிடம் பணிபுரிய இன்பாவும் ,  ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்க கஸ்தூரியும் இணைந்து சென்னைக்கு வருகிறார்கள், அவர்களுக்கு வாரிசும் பிறக்கிறது.ஆனால் இன்பா இயக்குநராக முயற்சி செய்யும் நிலையில் ,அவர்களுடைய குடும்ப நிலை காரணமாக குழந்தையை உடனிருந்து கஸ்தூரியால் கவனிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது, இந்நிலையில், கஸ்தூரியின் உறவினர் இன்பாவை பழி வாங்க முடிவு செய்கிறார். இறுதியில் இன்பா தன் ஆசைக் கனவின்படி இயக்குநர் ஆனாரா? என்பதை மீதி கதையாக திரையில் சொல்லும் வண்ணம் படம் அமைந்துள்ளது.

படத்தின் கதையின் நாயகனாய் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ளார், காதல் இலட்சியகனவு, கடமை என பல பரிமாணங்கள் கொண்ட கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார் , கதையின் நாயகியாய் சஞ்சிதா ஷெட்டி யதார்த்தமான தோற்றத்தில் நிறைவாக நடித்துள்ளார் மேலும் சிங்கம் புலி, ராஜ்கபூர், அமுதவாணன், போன்றோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நடிப்பை வழங்கியுள்ளார்கள், இவர்கள் மட்டுமின்றி சிறப்பு தோற்றத்தில் இயக்குநர் பிரபு சாலமனும் , நடிகர் விஜய் சேதுபதியும் தங்கள்து பங்களிப்பை குறைவின்றி பதிவு செய்து விட்டு செல்கிறார்கள் .

இந்த படத்துக்கு N .R. ரகுநந்தன் இசைஅமைத்துள்ளார், அவரது இசையில் ‘என்னங்கடா நியாயம் ’ பாடல் தனி கவனம் பெறுகிறது .இதே தலைப்பில் 1982 இல் இயக்குனர் மகேந்திரனும் ஒரு நிறைவான தமிழ் படத்தை இயக்கியிருந்தார்.இந்த அழகிய கண்ணே-வை இயக்கியுள்ள அறிமுக இயக்குனர் ஆர். விஜயகுமாரின் இந்த முதல் முயற்சியை பாராட்டலாம், இயக்குநருக்கு ஏ.ஆர்.அசோக் குமாரின் ஒளிப்பதிவும் சங்கத்தமிழனின் படத்தொகுப்பும் உறுதுணையாக நின்றுள்ளது ,

கண்கள் பழையதாக இருந்தாலும் பார்வை புதியதாக உள்ளது .

Spread the love