Monday, April 20

பிச்சைக்காரன் 2 -விமர்சனம்

இந்தியளவில் முதல் வரிசை செல்வந்தர்களில் ஒருவராக விஜய் குருமூர்த்தியும் , மற்றொருவராக பிச்சைக்காரன் சத்யாவும் ( விஜய் குருமூர்த்தி ,சத்யா இரண்டுமே விஜய் ஆண்டனிதான்) உள்ளார்கள் அதில் சத்யா தொலைந்து போன தன் தங்கையை தேடிக் கொண்டிருக்கிறார்.செல்வந்தர் விஜய் குருமூர்த்தியின் சொத்துக்களை கைப்பற்ற அவருக்கு மிக நெருக்கமான் நண்பர் அரவிந்த் (தேவ் கில்).அவருடன் இளங்கோ (ஜான் விஜய்) மற்றும் சிவாவும் (ஹரீஷ் பேரடி) சேர்ந்து வேறொருவரின் மூளையை விஜய் குருமூர்த்திக்கு பொருத்தி அதன் மூலம் அவரது சொத்துகளை கபளீகரம் செய்ய திட்டமிடுகின்றாகள்,இந்த திட்டத்தின் படி சத்யாவின் மூளை, குருமூர்த்தியின் உடலுடன் பொருத்தப்படுகின்றது , அதன் பின்  கண்விழிக்கும் சத்யா,தான் வேறொருவரின் உடம்பில் இருப்பதை உணர்கிறார்,அந்த மூன்று சதிகாரர்களையம் அழித்துவிட்டு விஜய் குருமூர்த்தியாகவே மாறும் அவர், ஏழை மக்களுக்காக் ‘ஆண்டி பிகிலி’ என்ற பெயரில் மிகக் குறைந்த விலையில் பொருட்களை தயாரித்து விற்க்கும் திட்டத்தை தொடங்குகிறார்.இதன் பிறகு நடந்தவை என்ன? சத்யா தனது தங்கையை கண்டுபிடித்தாரா? இது போன்ற பல கேள்விகளுக்கு விடை தருகிறது மீதி திரைக்கதை

இசைஅமைப்பாளராக தமிழ் திரைவானில் தனது கலைப்பயனைத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி அவர்கள் பாடகராக ,நடிகராக ,படத்தொகுப்பாளராக என பரிமணங்கள் பல கண்டு, தற்போது இயக்குநராவும் புதிய பரிமாணத்தில் கால் தடம் பதித்துள்ள படம்தான் இந்த பிச்சைகாரன்2 ,

நடிப்பை பொறுத்தவரையில் அவருக்கென்று அவரே வடிவைத்த பார்முலாவில் இம்முறையும் நன்கு நடித்துள்ளார் , நாயகியாக காவ்யா தாப்பார் கிடைத்த வாய்ப்பில் குறைவின்றி நடித்துள்ளார் தேவ் கில், ஜான் விஜய், ஹரீஷ் பேரடி, ராதாரவி ,யோகிபாபு . மன்சூர் அலிகான் போன்றோர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப நடித்துள்ளார்கள்,ஹீரோயின் காவ்யா தாப்பார் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

இசைஅமைப்பாளர் விஜய் ஆண்டனி. இயக்குனர் விஜய் ஆண்டனிக்கு பக்கபலமாக உள்ளார் ,ஒளிப்பதிவில் ஓம் நாராயணின் ஒளிப்பதிவு கதையோட்டத்துக்கு ஏற்ப காட்சிகளை நன்கு வழங்கியுள்ளது.

செண்டிமெண்ட்,ஆக்ஷன், என பல கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்கு படமாக பிச்சைக்காரன் 2 படம் அமைந்துள்ளது .

Spread the love