கதையின் நாயகியாக மேரி என்னும் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா கோவா-வில் இருந்து ஹைதராபாத்துக்கு வந்து அங்குள்ள பள்ளி ஒன்றில் இசை ஆசிரியையாக பணியில் சேர்கிறார், அந்த பள்ளியிலோ பள்ளியில் படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகின்றது , மற்ற வேறு எந்த துறை சார்ந்த கலைகளுக்கும் அங்கு முக்கியத்துவம் கிடைக்காததால், அவர் தன் வீட்டிலேயே மியூசிக் ஸ்கூல் ஒன்றை துவங்குகிறார்.

அவரின் அந்த மியூசிக் ஸ்கூலுக்கு சில பிள்ளைகள் வந்து சேருகின்றனர், பிறகு அவர்கள் சவுண்ட் ஆப் மியூசிக் என்ற நாடகம் நடத்த முடிவு எடுக்கின்றார்கள் ,அந்த நாடகத்துக்காக பயிற்சி எடுக்கும் போது பல இடையூறுகள் வருவதால் பயிற்சி நடக்காததால் ஸ்ரேயாவின் ஊரான கோவாவிற்கு சென்று பயிற்சி எடுக்க முடிவெடுத்து, கோவா செல்கின்றனர் , அங்கு அவர்கள் பயிற்சியை முடித்து சவுண்ட் ஆப் மியூசிக் நாடகத்தை நடத்தி னார்களா ? இல்லையா ? என்பது படத்தின் மீதி கதை.
இந்த கதையினை இயக்குனர் பாப்பா ராவ் பிய்யாலா தயாரித்து இயக்கியுள்ளார்.
முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்பன்மொழித் திரைப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசைஅமைத்துள்ளார் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் பெஞ்சமின் கிலானி, சுஹாசினி முலே, மோனா அம்பேகன்கர், வினய் வர்மா மற்றும் பல குழந்தை நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ள இந்த படம் இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தையும், பள்ளி குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் கல்விச் சாதனைகள் மட்டுமே முக்கியமில்லை, கல்வியல்லாத மற்ற செயல்பாடுகளும் முக்கியமானவையே என்பதை வலியுறுத்துகிறது இத்திரைப்படம்
