இயக்குநர் விக்னேஷ் ஷா P N ,2016 ஆம் ஆண்டில் ‘ஐபோன் ஸ்ரீயும் அயனாவரம் ரவியும்’ எனும் பெயரில் இயக்கிய குறும்படம்தான் தற்போது ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற பெயரில் படமாக உருவாகி இருக்கிறது. சிங்கிள் இளைஞர்களின் வருத்தத்தை தீர்க்கும் வகையில் மனிதர்களிடையே பேசி, பழகும் பெண்ணை மையமாக கொண்ட செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்மார்ட்போன் ஒன்றை ஒருவர் உருவாக்குக்கிறார் ,சிறப்பான அந்த ஸ்மார்ட்போனை வணிக சந்தையில் விற்று ஏராளாமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என தொழிலதிபர் பகவதி பெருமாள் ஆசைப்படுகிறார் , அந்த போன் திருடபட்டு கடைசியில் உணவு டெலிவரிவேலை பார்க்கும் சிவாவின் கைகளில் கிடைக்கிறது அந்த ஸ்மார்ட்போன் சிவாவின் வாழ்வில் நிறைய மாறுதல்களை கொண்டு வருகிறது , இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஸ்மார்ட்போன் சிம்ரனுக்கு சிவாவின் மீது காதல் வருகிறது , அந்த காதலை சிவா ஏற்றாரா? இல்லை நிராகரித்தாரா? என்பது மீதி படத்தின் கதை.

கதையின் நாயகன் சிவாவுக்கு ஏற்ற டைமிங் காமெடிகள் அவரது கதாபாத்திரதை ரசிக்க வைக்கிறது, நீண்ட இடைவேளைப்பிறகு பாடகர் மனோ நடித்துள்ளார் அவரது வசனங்களும் உடல்மொழியும் பாராட்டும்படி உள்ளது, மீண்டும் பல பட ங்களில் இவரை தொடர்ந்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது

மற்றும் ஸ்மார்ட்போன் பெண் “சிம்ரன்” ஆக மேகா ஆகாஷ், துளசியாக அஞ்சு குரியன், மாகாபா ஆனந்த், கேபிஒய் பாலா, சாரா, பகவதி பெருமாள் ஆகியோரும் தங்களது கதாபாத்திரதுக்கு ஏற்ற வகையில் நன்கு நடித்துள்ளளார்கள்
லியோன் ஜேம்ஸ் இசையில் ‘ஸ்மார்போன் சென்யோரிட்டா’ பாடலும் பின்னணி இசையும், ஆர்தர் ஏ வில்சனின் ஒளிப்பதிவும் கதைகளத்துக்கு தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கின்றன.
இனிவரும் காலங்களில் தொழில்நுட்பங்களில் வளர்ச்சியும் மாற்றங்களும் ஏற்படும்போது ,இப்படியெல்லாம் கூட நடக்கலாம் என்பதை தனது கற்பனை கதையில் நகைச்சுவையுடன் ஜாலியாக சொல்லி படத்தை இயக்கிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ஷாP N.
லாஜிக் பார்க்காமல் முழு நீள காமெடி படம் பார்க்க விரும்புவோர், இந்த சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தை தவறாமல் பார்க்கலாம்.
