Wednesday, April 22

வசந்த முல்லை -திரை விமர்சனம்

உடலுக்கு தேவையான ஓய்வை தராமல் ஓடிகொண்டிக்கொண்டே, தான் பார்க்கும் மென்பொருள் துறையில் ஓயாமல் உழைக்கிறார்  ருத்ரன் (பாபி சிம்ஹா), அந்த கடின உழைப்பு அவருக்கு மன உளைச்சலை கொடுக்கவே வேலையிலிருந்து இடைவெளி எடுத்து, தன் காதலி நிலாவோடு (காஷ்மீரா பர்தேஸி) வெளியூருக்கு செல்கிறார். அங்கு அவர்கள் தங்கும் ‘வசந்த முல்லை’ என்னும் ஹோட்டலில் பல எதிர்பாராத சம்பங்கள் நடக்கிறது. அதனால் ஏற்படும் இடையூறுகளிருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் அந்த சம்பவங்களுக்கு பின்ணணி என்ன ?இவற்றை மீதி படத்தின் கதை விவரிக்கிறது


இந்தபடத்தின் கதை நாயகனாய் ‘ருத்ரன்’ என்கிற கதாபாத்திரத்தில் சிம்ஹாவும், அவருக்கு இணையாக காஷ்மீரா பரதேசியும் தங்களது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நன்கு நடித்துள்ளார்கள் நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்,மற்றும் கொச்சு பிரேமன், சரத் பாபு ஆகியோரம் நடித்துள்ளார்கள்

நிறைய இரவு காட்சிகளுடன் மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவும் ராஜேஷ் முருகேசன் இசையும் அமைத்துள்ளார்கள் இவர்‘பிரேமம்’படத்துக்கு இசையமைத்தவர், கலைஇயக்குனர் R .K நாகராஜின் கலைவடிவங்கள் நன்கு அமைக்கப்பட்டுள்ளன.

டைம்லூப் போன்ற அம்சங்களுடன் விறுவிறுப்பான திருப்பங்களுடன் கூடிய கதையை படமாக்கி தந்துள்ளார் இயக்குநர் ரமணன் புருசோத்தமா.

உழைப்பின் மேன்மையுடன், ஓய்வின் அவசியத்தையும் எடுத்து சொல்லும் இந்த வசந்த முல்லை இளைஞர்களின் இதயங்களில் வாசம் வீசும்.

Spread the love