Thursday, April 23

ஓ மை கோஸ்ட் – திரை விமர்சனம்!

Oh My Ghost படத்தில் கதையின் நாயகனாய் வரும் சதிஷ் ஒரு கதை ஆசிரியராக உள்ளார் , அடல்ஸ் ஒன்லி கதைகளை இயக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் அவருக்கு தர்ஷா குப்தா காதலியாக உள்ளார் ,அவருக்கு அமானுஷ்யமான கனவுகள்அடிக்கடி வருகின்றன, ஒரு கட்டத்தில் தர்சா குப்தாவின் உடலில் ஒரு பேய் புகுந்து விடுகிறது, உடனடியாக தன்னை அனகொண்ட புரத்திற்கு கூட்டிச் செல்லும்படி அது கேட்கிறதுஅதன் படி மூன்று பேரும் அங்கு செல்ல, அதன் பிறகு என்ன நடந்தது என்பதே ஓ மை கோஸ்ட் படத்தின் மீதி கதை.

இப்படத்தில் சதீஷ் கதையின் நாயகனாக நடித்துள்ளார் ,சன்னி லியோன் தமிழில் முதன் முறையாக இந்த படத்தில் நடித்துள்ளதால், சன்னி லியோன் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை OMG ஏற்படுத்தி இருந்தது,

யுவன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரமேஷ் திலக், யோகி பாபு, ஜிபி முத்து, மொட்டை ராஜேந்திரன், அர்ஜுனன், தங்க துரை மற்றும் பலரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார்கள், இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸின் இசையும் , தீபக் D. மேனனின் ஒளிப்பதிவும் இயக்குனர் யுவனுக்கு பக்க பலமாய் உள்ளது,

வரலாற்று பின்னணியில், உருவாகியுள்ள ஹாரர் காமெடி படமான Oh My Ghost இளம் ரசிகர்களைநிச்சயம் கவரும் .

Spread the love