Sunday, April 26

கட்டா குஸ்தி விமர்சனம்

கட்டுனா இந்த மாதிரி பொண்ணைத்தான் கட்டுவேன்னு இருக்கற ஆணுக்கும் ,இந்த மாதிரி பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு பலபேரு தவிர்த்துவிட்டு போற பொண்ணுக்கும் கல்யாணம் நடந்தா எப்படி இருக்கும்?அப்படியே கல்யாணமும் நடக்குது? அடுத்து வரும் காட்சிகள்தான் highlight .

படத்தோட ஆரம்ப காட்சிகளில் பாக்யராஜ், பாண்டியராஜன் போன்றவர்களின் படங்களின் சாயல் போலத்தான் இருக்கு..இதுல என்ன புதுசா சொல்ல போறாங்கன்னு நினைச்சா ..? அதே மாதிரி ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் நடத்தலாம் இங்க சில பொய்தானே சொல்லுறாங்க,, இதுவும் பழசுதா னே அப்படின்னு மேலும் நினைச்சா ….உடனே அடுத்த சீனிலேயே 90K , 2K எல்லோரும் ரசிக்கும்படியாக, ஏற்கும்படியாக,வயிரு குலுங்கும்படியாக, சிரிக்கவைத்து,படம் பார்ப்பவர்கள் தன்னை அறியாமல் கைதட்டி மகிழ , சந்தோஷத்துடன் மீண்டும் வாங்க என்று வரவேற்பு கொடுக்கும் படம்.

இன்றைய Bacheloreகள் பலர் விடும் பல சவால்கள் ,நாளைக்கு கல்யாணம் ஆன பின்பும் அதே சவாலுடன் இருக்கவும் தொடரவும் முடியுமா? முடியாதா?மேலும் தனது எதிர்பார்ப்புகளுக்கு அப்படியே எதிர்மறையாய் அமையும் மனைவி… இந்த சிக்கலுக்குள் சிக்கி தவிக்கும் விஷ்ணு விஷாலின் நடிப்பு பாராட்டும்படி உள்ளது குறிப்பாக கோயில் சண்டை காட்சியில நாயகியின் தலைமுடி டோப்பா என்று தெரிந்ததும் ,அதோட அத்தனை பேரையும் ஐஸ்வர்யா லெட்சுமிஅடித்து நொறுக்கும்போதும்,கடைசியில் சவரிமுடி முகத்துலபடும்போதும், two wheelerல ஹீரோயின் பின்னாடி ஒரிஜினல் முடிய ஏக்கமாக தொடும்போதும் ஆடியன்ஸை ஆனந்தமாய் கை தட்டி வயிறு வலிக்க சிரித்து ரசிக்க வைத்துள்ளார் ,குடும்பத்துக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இந்த திரையரங்க கைதட்டல் ஒலியே விஷ்ணு விஷாலின் நடிப்பை வாழ்த்தும்படி உள்ளது .

பூங்குழலியை இப்படி பேய்குழலியாக பார்ப்போம் என்று எதிர்பார்க்கவே இல்லை ,விக்கு தலைய காப்பாத்துற போராட்டத்த இதுவரைக்கும் இப்படி பார்த்ததேயில்லை, இன்டெர்வல் வரைக்கும் பூனை அதுக்குப்பிறகு புலியாக மாறி ஐஸ்வர்யா லெட்சுமி சிறப்பாக நடிச்சித்திருந்தாங்க……ஹீரோ சப்ஜெட்டுக்குள் ஹீரோயின் சப்ஜெட்டுன்னு சொல்லாம சொல்லும் வகையில் இயல்பான நடிப்பால வெளிப்படுத்தியிருக்காங்க .தொடர்ந்து உங்க கலைப்பயணம் தமிழசினிமாவுல தொடரும் .

சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தை இயக்கிய செல்லா அய்யாவு மீண்டும் விஷ்ணு விஷாலுடன் இணைந்து இந்த படத்தை வழங்கியுள்ளார், குடும்ப கதையை எல்லாதரப்பு ஆடியன்ஸும் ஏற்கும் வ,கையில் ஜனரஞ்சகமான படமாக உருவாக்கியுள்ளார் ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட கதாபாத்திரத்தில் கருணாஸ் மற்றும் முனிஸ்காந்த், காளிவெங்கட், ரெடின் கிங்க்ஸ் லீ என் அனைவரும் தங்கள் பங்குக்கு குறைவில்லாமல் நடித்துள்ளார்கள்

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் விவேக் வரிகளில் சால் சக்க … அவரது (ஜஸ்டின் பிரபாகரன்) வரிகளில் மைக் டைசன்…போன்ற பாடல்களும் ரசிக்கும்படி உள்ளது ,அவரது பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ற பின்புலத்தை நன்கு வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது கேரளா, பொள்ளாச்சி பகுதிகளின் வனப்பை ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு சிறப்பாக பதிவு செய்துள்ளது

குடும்ப ஆடியன்சை மட்டுமல்லாது, எல்லாதரப்பு மக்களையும் இந்த கட்டாகுஸ்தி நிச்சயமாய் சென்று சேரும்..

Spread the love