Sunday, September 6

*உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு*

*உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு*

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் சந்தித்தனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக எங்களின் முன்னோடியும் திரையுலகின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகவும் திகழும் திரு. கமல்ஹாசன் அவர்களை நிர்வாகிகளும் செயற்குழு உறுப்பினர்களும் சந்தித்து மகிழ்ந்தோம்.

சினிமாவில் வியக்கத்தக்க எழுத்தாளர்கள் நிறைய பேர் இருந்தாலும் திரு. கமல்ஹாசன் அவர்கள் அடுத்த தலைமுறைக்கான பாதையை வகுத்துக் கொடுத்த ஒரு முன்னோடியான எழுத்தாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அந்த எழுத்தாளரை சந்தித்து அவருடைய அனுபவங்களையும், அவருடைய வழிகாட்டுதலையும் நாங்கள் கேட்டுக்கொள்ள நேரம் ஒதுக்க கேட்டிருந்தோம்.

அதை எற்றுக்கொண்டு அவர் எங்களை சந்தித்தார். அப்போது நிறைய விஷயங்களை எங்களிடம் பகிர்ந்தார். அவர் உருவாக்கிய படங்களான மகாநதி, அன்பே சிவம், ஹே ராம், குணா, தேவர் மகன் என அனைத்திலும் அவருடைய எழுத்துகள் மிகவும் வலிமையானதாகவும் கூர்மையானதாவும் இருக்கும், சிறிய வசனமாக இருந்தாலும் பெரும் அர்த்தத்தை சொல்லும்.

அந்த மாதிரியான எழுத்துகளை கொடுத்தவர் தான் திரு. கமல்ஹாசன் அவர்கள். அவரை சந்தித்தது எங்களுக்கு பெரிய உற்சாகம். எங்களை நேரம் ஒதுக்கி சந்தித்து, வாழ்த்துகளை தெரிவித்து, சங்கத்தை சிறப்பாக நடத்துங்கள் என்று சொல்லி அனுப்பினார். இந்த சந்திப்பு எங்களுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும்,” என்று தெரிவித்துள்ளனர்.

 

Spread the love