Saturday, September 5

’4 இடியட்ஸ்’- திரைப்பட விமர்சனம்

“கொள்ளையடிக்க வந்த வீட்டில் பணத்தைவிட பெரிய பிரச்சனை காத்திருந்தால்?”பணத்துக்காக பங்களாவுக்குள் நுழையும் நான்கு திருடர்கள், அங்கே எதிர்பாராத விதமாக சிக்கிக்கொள்ள , அதன்பிறகு அவர்கள் படும் அவஸ்தைகள்தான் ‘4 இடியட்ஸ்’ படத்தின் ஒன் லைன் கதை.

வின்சென்ட் அசோகனின் பங்களாவில் ஏராளமான செல்வம் இருப்பதாக தெரிந்துகொள்ளும் நான்கு திருடர்கள், அதை கொள்ளையடிக்க திட்டமிட்டு வீட்டிற்குள் செல்கிறார்கள்.நான்கு பேரும் தங்களை மிகவும் புத்திசாலிகளாக நினைத்துக்கொண்டு ஒவ்வொரு திட்டத்தையும் தீட்டுகிறார்கள் . ஆனால், அவர்கள் தீட்டும் ஒவ்வொரு திட்டமும் அவர்களுக்கே எதிராக திரும்புகிறது.ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் நால்வரும் சிக்கிக்கொள்ள ,அங்கிருந்து தப்பிக்க அவர்கள் தீட்டும் திட்டங்களும், அதனால் உருவாகும் பிரச்சனைகளும்தான் படத்தின் மீதிக்கதை.

படத்தில் நான்கு திருடர்களாக புகழ், திடியன், கும்கி அஸ்வின் மற்றும் இந்திரன் நடித்திருக்கிறார்கள். சின்னத்திரையில் தங்களுக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் இந்த நால்வரும், தங்களுடைய இயல்பான காமெடி பாணியை கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தியிருக்கிறார்கள். நான்கு பேரும் சேர்ந்து வரும் காட்சிகள் படத்திற்கு கலகலப்பை கூட்டுகின்றன.மேலும் ரவி மரியா. வின்சென்ட் அசோகன் பிரக்யா நயன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கான கதாபாத்திரங்களை நன்கு வெளிபடித்தியுள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் U .K செந்தில்குமார் படத்தின் கதைக்கு ஏற்ற வகையில் எளிமையான காட்சியமைப்பை கொடுத்திருக்கிறார். காமெடியை மையமாக கொண்ட கதையில் தேவையில்லாத பிரம்மாண்டத்தை திணிக்காமல், கதாபாத்திரங்களின் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்திற்கு பலமாக இருக்கிறது.சுபாஷ் முனி ரத்தினம் இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. பின்னணி இசையும் காமெடி காட்சிகளுக்கு தேவையான அளவுக்கு துணை நிற்கிறது.

இந்த படத்தை சஜோ சுந்தர் முருகேசன் இயக்கியிருக்கிறார். பெரிய அளவில் லாஜிக் தேடாமல், டார்க் காமெடி மற்றும் பொழுதுபோக்கு ஆகிய இரண்டையும் மையமாக வைத்து படத்தை நகர்த்தியிருக்கிறார்.கதை  சீரியஸாக செல்லாமல் காமெடி கோணத்தில் சொல்லப்பட்டிருப்பதால், படம் ஒரு லைட்டான பொழுதுபோக்கு அனுபவத்தை கொடுக்கிறது.

மொத்தத்தில், லாஜிக், சீரியஸ் கதை, மிகப்பெரிய திருப்பங்கள் என எதிர்பார்க்காமல்…சில மணி நேரம் கவலைகளை மறந்து சிரித்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செல்பவர்களுக்கு, 4 இடியட்ஸ் ஒரு ஜாலியான டார்க் காமெடி ட்ரீட்!

Spread the love