அடையாளம் என்கிறது அடுத்தவங்க கொடுக்கறது இல்ல, நாமதான் நம்ப அடையாளத்தை உருவாக்கிக்க வேண்டும் என்னும் கருத்தை, ஒரு சாதாரண போலீஸ் அவமானப்பட்ட இடத்திலேயே அடையாளத்தை ஏற்படுத்த எடுத்துக்கொள்ளும் முயற்சியும் ,போராட்டமும் நிறைந்ததுதான் இந்த வாரண்ட் நெடுந்தொடரின் கதையின் கரு.

தன் மகன் பிரசாந்த் பாண்டியராஜனை அரசு வேலையில் அமர்த்திப் பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்படும் தந்தை பாலாஜி சக்திவேல் அதன் பொருட்டு, தன் மகனை எல்லா அரசு போட்டி தேர்வுகளையும் எழுத வைக்கிறார், ஆனால், அந்த முயற்சிகள் எல்லாவற்றிலும் பிரசாந்த் பாண்டியராஜுக்கு வெற்றி கிட்டவில்லை , அதன் பிறகு போலீஸ் கமிஷனரிடம் ஓட்டுநராக உள்ள உறவினர் ஒருவரது மூலமாக போலீஸ் வேலையில் சேருகிறார் பிரசாந்த் பாண்டியராஜ் .ஆனால் அங்கு சகத்துறையாளர்களின் கேலிக்கும், எள்ளிநகையாடலுக்கும் ஆட்படும் பிரசாந்த் பாண்டியராஜ் .ஒரு சூழலில் இந்த வேலையே நமக்கு வேண்டாம் என்று முடிவு எடுக்கக் கூடிய நிலையில் நடக்கக்கூடிய ஒரு சம்பவத்தின் மூலமாக, அவருடைய பணியிலும் சராசரி வாழ்வியலிலும் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்பதை சொல்வதுதான் வாரண்ட்டின் மீதி கதை.

இதற்கு முன்பாக வில.ங்கு என்னும் இணைய தொடரின் வாயிலாக ரசிகர்களிடம் தனி வரவேற்பை பெற்ற இயக்குனரான பிரசாந்த் பாண்டியராஜ் இந்த வாரண்ட் சீரிஸின் மூலம் கதாசிரியராக மட்டுமின்றி, கதையின் நாயகனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.“கோட்டை கருப்பசாமி” என்னும் காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்க கூடிய அவர் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையிலான தோற்றத்திற்கு முற்றிலும் பொருந்தி போகிறார், ஒரு சராசரி இளைஞன் தன்னுடைய குடும்பம் ,பணியிடம், சமூகம் அதில் பயணிக்கும் சக உறுப்பினர்கள் இவர்களுடன் பயணிக்கும் ஒரு வாழ்வியல் பயணத்தில் நடக்கக்கூடிய சம்பவங்களுக்கு சாட்சியான கதாபாத்திரத்தில் திறம்பட நடித்துள்ளார். இயக்குனராகவும், நடிகராகவும் ஏற்கனவே தமிழ் திரை உலகில் பயணித்து வெற்றி பெற்ற இயக்குனர்களின் வரிசையில் பிரசாந்த் பாண்டியராஜனும் நிச்சயம் இடம்பெறுவார் என்று நம்பலாம் .
எட்டு எபிசோடுகளாக விரியும் கதை கதைக்களத்தில் கதையோடு ரசிகர்களை ஒன்றி பயணிக்க வைத்துள்ளதில் சாம் சி எஸ் -ன் பின்னணி இசையும் ,படத்தொகுப்பாளர் ராமரின் உழைப்பும் பெரும்பங்காற்றி உள்ளது என்று சொல்லலாம். சீராக பயணிக்கும் கதைக்கும் ,காட்சிகளுக்கும் ஏற்ப, நேர்த்தியான காட்சி அமைப்புகளை தன் கைவண்ணத்தில் உருவாக்கி ரசிகர்களுக்கு சிறப்பான காட்சிப்படுத்தலை ஒளிப்பதிவாளர் அசோக் குமார் கொடுத்திருக்கிறார்.
பிரசாந்த் பாண்டியராஜின் அப்பாவாக பாலாஜி சக்திவேலும் அம்மாவாக கௌசல்யாவும் நன்கு நடித்துள்ளார்கள் , மேலும் நர்மிதா, அருள்ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, அருள் தாஸ் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் குறைவில்லாத நடிப்பை நிறைவாக கொடுத்திருக்கிறார்கள்.
பல அத்தியாயங்களாக நகரும் கதைக்களத்திற்கு தேவையான விறுவிறுப்பான திரைக்கதையுடன், நிறைவான நட்சத்திர தேர்வும் கொண்டு இயக்குனர் விக்னேஷ் நடராஜன் சிறப்பான முறையில் இந்த தொடரை இயக்கியுள்ளார் . குறிப்பிட்ட துறை சார்ந்த கதைகளை காட்சிப்படுத்துதல் அதில் இடம்பெறும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சீரிய முறையில் வசனங்களை கையாளுதல் போன்ற அம்சங்களில் விக்னேஷ் நடராஜன், பிரசாந்த் பாண்டியராஜின் பணி பாராட்டும்படியாக உள்ளது .குறிப்பாக வேலை பாக்கறவனுக்கு வேலை கொடுங்க, வேலை பாக்காதவனுக்கு சம்பளத்தை கொடுங்க போன்றவை ரசிக்கும்படி உள்ளன
மொத்தத்தில் இந்த வாரண்ட் இணைய தொடர் ,அனைத்து ரசிகர்களின் இதயத்தில் இணைந்த தொடராக வலம் வரும்.
