Thursday, April 16

நீ ஃபாரெவர் (Nee Forever)- திரை விமர்சனம்

காதலை நம்பாத ஒரு இளைஞன்… காதலை உணர விரும்பும் ஒரு இளம் இயக்குனர்… இருவரும் போலியாக தொடங்கும் தல் எப்படி உண்மையான காதலாக எப்படி மாறுகிறது என்பதை ரசிக்கும்படி திரைமொழியில் சொல்லுகிறது இந்த படம்.

காதல் திருமணத்திற்கு எதிரான குடும்பத்தில் வளர்ந்த ஐடி இளைஞன் அஜய் (சுதர்ஷன் கோவிந்த்) தான் கதையின் நாயகன் , காதல் அனுபவமே இல்லாமல் இருக்கும் அஜய், நீ ஃபாரெவர்’ என்ற டேட்டிங் செயலியை (APP ) உருவாக்குகிறார் . கதையின் நாயகியான மதி (அர்ச்சனா ரவி) இயக்குனராக உயர வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர் இவர் ஒரு உணர்ச்சிப் பூர்வமான காதல் கதைக்காக போலியாக காதலிக்க தீர்மானிக்கிறார் .இந்த இருவரும் தங்கள் உண்மையான அடையாளங்களை மறைத்து தொடங்கும் இந்த ‘போலி காதல்’, மெதுவாக உண்மையான உணர்வுகளாக மாறும் பயணம் தான் படத்தின் மீதிக்கதை .

சுதர்ஷன் கோவிந்த் – ஐடி இளைஞனாக அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் , மதி என்னும் கதாபாத்திரத்தில் , லட்சியம் கொண்ட துறுதுறுப்பான பெண்ணாக அர்ச்சனா ரவி நன்கு நடித்துள்ளார் .அஜய்யின் தாத்தாவாக வரும் ஒய்.ஜி. மகேந்திரன், காதலை வெறுக்கும் பாத்திரத்தில் தனது அனுபவ நடிப்பை நன்றாக வெளிப்படுத்துகிறார்.மேலும் நிழல்கள் ரவி, வித்யா, பிரதோஷ், நோபல் ஜேம்ஸ், ரெதிகா ஸ்ரீனிவாஸ் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவின்றி நடித்துள்ளார்கள்.

இசையமைப்பாளர் அஷ்வின் ஹேமந்தின் பாடல்களும் ,பின்னணி இசையும் காதல் காட்சிகளை இன்னும் அழகாக நகர்த்த உதவியுள்ளன .ஒளிப்பதிவாளர் ராஜா பட்டர்ஜார்ஜி-யின் கோணங்களும் ஒளிஅமைப்பும் சென்னை நகரம் மற்றும் பொள்ளாச்சியின் சூழலை கண்கவர் காட்சிகளாக பதிவு செய்துள்ளன. படத்தொகுப்பாளர் எஸ்.ஏ. நாகர்ஜுனின் பணி கதையின் வேகத்தை சரியாக முறையில் கையாண்டுள்ளது .

இன்றைய தலைமுறையின் உறவுகள், தொழில்நுட்பம், உணர்வுகள் ஆகியவற்றை இணைத்து ஒரு நவீன காதல் கதையினை , குடும்ப பின்னணியுடன் சுவாரஸ்யமான முறையில் திரைமொழியில் சொல்லியுள்ளார் இயக்குநர் அசோக்குமார் கலைவாணி.

மொத்தத்தில் ‘நீ ஃபாரெவர்’ இன்றைய கால காதலை, உணர்ச்சிகளோடு பேசும் ரொமான்டிக் படம்!.

Spread the love