அயல்நாட்டு மண்ணில் ஒரு இளம் பெண்ணின் வாழ்வியல் போராட்டங்களும் சாதனைகளும் நிறைந்த பதிவு.

இளம் பருவத்திலேயே கொரிய நாட்டினுடைய கலை மற்றும் கலாச்சாரத்தின் மீது ஈர்க்கப்படும் செண்பா (பிரியங்கா அருள் மோகன்) என்றாவது கொரியாவிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை கனவுகளுடன் வாழ்ந்து வருகிறார் ,செண்பா , மணி என்னும் தன் பள்ளி தோழனை காதலித்தாலும் அந்த காதலுக்கு பிரியங்கா மோகினின் தந்தையிடம் இருந்து எதிர்ப்பு கிளம்ப, பிரியங்கா அருள் மோகன் தன் காதலனுடன் சென்னைக்கு சென்று விடுகிறார், ஆனால் அதற்குப் பின்னர் நடைபெறும் சம்பவங்கள் பிரியங்கா மட்டும் தனித்து கொரியா செல்ல சூழலினை ஏற்படுத்துகிறது, புதிய மனிதர்களுடன், புதிய சூழ்நிலையில், புது வாழ்க்கையை கொரியாவில் வாழ துவங்கும் பிரியங்கா அருள் மோகன் வாழ்க்கையில் அதன் பின்னர் நடந்தவைகளை சொல்வதே இந்த படத்தின் மீதி கதை.
படத்தின் மைய கதாபாத்திரத்தில் நடித்திருக்க கூடிய பிரியங்கா அருள் மோகனுக்கு ஒரே படத்தில் அனைத்து சூழலுக்கும் ஏற்ற வகையில் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஆழமான கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பினை அவரும் நன்கு பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார். மேலும் பிரியங்காவின் காதலராக நடித்துள்ள ரிஷிகாந்த் மற்றும் பார்க் ஹை- ஜின் போன்ற கொரிய நாட்டு நாட்டின் கலைஞர்களும் தங்களுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தாங்கள் ஏற்றுள்ள கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்துள்ளார்கள் .

ஒரு இளம் பெண்ணின் வாழ்வியலை புதிய சூழலில் பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளர் பிரசன்னகுமாரின் பங்களிப்பு மிகவும் உறுதுணையாக அமைந்துள்ளது ,அதேபோல ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் பாடல்கள் செவிக்கு இனிமையாகவும், மனதிற்கு இதமாகவும் அமைந்துள்ளது.அவரது பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு மிகவும் பக்கபலமாக உள்ளது.
தமிழ்நாட்டின் நகரத்திலிருந்து முன்பின் அறிமுகம் இல்லாத தென்கொரியாவின் சியோல் நகரத்திற்கு செல்லும் செண்பா என்னும் இளம் பெண்ணின் வாழ்க்கை பயணத்தில் அவள் எதிர்கொள்ளும் சவால்கள் அவள் சந்திக்கும் மனிதர்கள்,இவற்றை அழகாக ஒன்றிணைக்கும் கதைக்கு ,தரமான திரைக்கதை வடிவமும் கொடுத்து சிறப்பாக படத்தினை இயக்கியுள்ளார் இயக்குனர் ரா. கார்த்திக்.
தன்னம்பிக்கையுடன் பயணிக்கும் இளம் பெண்ணின் வாழ்வியல் பதிவு
