பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ஒளிப்பதிவோடு இயக்குநராகவும் களம் இறங்கியுள்ள படம் “பூக்கி”.

இளம் காதலர்களான அஜய் திஷன் ,ஆர்.கே.தனுஷாவின் காதல் ,அவர்களுக்குள் ஏற்பட்ட சிறு ஊடல் மோதலாக அது காதல் முறிவில் முடிவடைந்து விடுகிறது, தங்களுடைய காதல் முறிவிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் காதலர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்காக உடற்பயிற்சிஆன்மீகம் என மாற்று முயற்சிகளில் தங்களது கவனத்தை திசை திருப்ப நினைக்கிறார்கள் .இறுதியாக இரண்டு பேருமே மற்றொரு காதலினையும் தேடிச் செல்கிறார்கள், அதன்பின் என்ன நடந்தது ?என்பதுதான் “பூக்கி”படத்தின் மீதி கதை.
காதல்,பிரிவு, ஏக்கம் அதிலிருந்து வெளிவர முயற்சித்தல் என பலவிதமான மன உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவருகிறார் கதையின் நாயகனாக நடித்துள்ள அஜய் திஷன். நாயகியாக நடித்துள்ள ஆர். கே. தனுஷா தன்னுடைய தோற்றத்தாலும்,நடிப்பாலும் தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பொருந்தக் கூடிய வகையில் நன்கு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மேலும் பாண்டியராஜன்விவேக் பிரசன்னாஆதித்யா கதிர்,பிளாக் பாண்டி இந்துமதி மணிகண்டன், பிக் பாஸ் சத்யா என பலரும் அவரவர் கதாபாத்திரங்களில் குறை காண முடியாத வகையில் நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பதோடு படத்தை இயக்கியும் இருக்கிறார் கணேஷ் சந்திரா ஒளிப்பதிவை பொருத்தமட்டில் காட்சிகளை நேர்த்தியான கோணங்கள் ,மற்றும் ஒளி அமைப்பின் மூலம் நிறைவான படமாக பதிவு செய்துள்ளார் .இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தக்கூடிய கதை தான் என்றாலும் திரைக்கதை காட்சி அமைப்புகளில் இன்னமும் சீர்படுத்தி இருந்தால் அது ஒட்டுமொத்த கதை ஓட்டத்திற்கும் நல்லதொரு பங்களிப்பினை கொடுத்திருக்கும் .
இந்த படத்திற்கு இசை விஜய் ஆண்டனி, பாடல்கள் பார்ப்பதற்கும் ,கேட்பதற்கும் ரசிக்கும்படி உள்ளன படத்தின் படத்தொகுப்பாளராகவும் விஜய் ஆண்டனி இந்த படத்தில் பணியாற்றியுள்ளார் .இன்றைய தலைமுறையினருக்கு இணக்கமான கதைக்களத்தை எடுத்துக்கொண்டு, படமாக்கி இருந்தாலும் திரைக்கதையில் இன்னமும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று தோன்ற வைக்கிறது .மற்றபடி தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ஒளிப்பதிவாளர் இயக்குனராக களம் இறங்கி இருப்பதற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.
