Tuesday, February 3

‘க்ராணி’- திரை விமர்சனம்

வடிவுக்கரசியின் மிரட்டலான அனுபவ நடிப்பும் ஹாரர் பின்புலத்தில் அமைந்துள்ள கதையும் இணைந்துள்ள கலவைதான் இந்த  ‘க்ராணி’ திரைப்படம்.

லண்டனில் இருந்து ஆனந்தநாக் , அபர்ணா தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் ஒரு கிராமத்திற்கு வந்து குடியேறுகின்றனர்,அந்தப் பகுதியில் 19 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார் அந்த கொலை வழக்கை காவல்துறை அதிகாரி திலீபன் விசாரணை செய்கிறார ஒரு கிராமப் பகுதியில் 10 வயதுக்குட்பட்ட ஒரு இளம் சிறுமி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார் அந்த சிறுமியின் கொலை வழக்கினை காவல்துறை அதிகாரி திலீபன் விசாரணை செய்கிறார் இந்த நிலையில் லண்டனிலிருந்து ஆனந்த்நாக் தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் தங்களுடைய பூர்வீக வீட்டிற்கு வந்து குடியேறுகிறார்கள் அந்த சமயத்தில் அவர்களது வீட்டின் முன்பாக மயங்கி நிலையில் வரும் மூதாட்டிக்கு அவர்கள் உதவி செய்கிறார்கள், அந்த வயதான மூதாட்டியை அவர்களுடன் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அந்த ஊரின் தலைவர் எச்சரிக்கை விடுத்தும் ஆனந்த்நாக் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை, உண்மையில் வடிவுக்கரசி யார் என்று உண்மை தெரியும் பொழுது அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுகிறது, காவல்துறை அதிகாரி திலீபனும் மூதாட்டி பற்றிய விவரம் அறிந்து அவரை தேடி ஆனந்த் நான் வசிக்கும் வீட்டுக்கு வருகிறார், அதன் பிறகு என்ன நடக்கிறது? அந்த மூதாட்டியின் பின்புலம் என்ன ?என்பதை விவரித்து சொல்கிறது  ‘க்ராணி’ படத்தின் மீதி கதை.

ஏற்கனவே முதல் மரியாதை அருணாச்சலம் போன்ற படங்களில் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் வடிவுக்கரசி, இந்தப் படத்திலும் தன்னுடைய கதாபாத்திரத்தில் அவரது அனுபவ நடிப்பின் முத்திரையை பதித்து நன்கு நடித்துள்ளார். இது போன்ற கதாபாத்திரங்களுக்கு அவருக்கு மாற்று என்று யாரையும் குறிப்பிட்டு சொல்லமுடியாத அளவுக்கு அவர் மட்டுமே உள்ளதால் இந்த கதாபாத்திரத்துக்கு அவர் மிகவும் பொருத்தமான தேர்வாகி உள்ளார் .மேலும் இந்த திரைப்படத்தில் திலீபன் காவல்துறை அதிகாரியாகவும்,சிங்கம்புலி போலீஸ் கான்ஸ்டபிளாகவும் ,அயல்நாட்டில் இருந்து கிராமத்திற்கு வந்து குடியேறும் தம்பதிகளாக ஆனந்த்நாக், அபர்ணாவும், அவர்களுடன் மாஸ்டர் கன்ஷியாம் பேபி சான்ரியா குழந்தைகளாகவும் என அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

இது போன்ற ஹாரர் கதைக்கள படங்களுக்கு ஒலியும், ஒளியும் மிக மிக அத்தியாவசியமான பணியினை தர வேண்டும், அந்த வகையில் இந்த படத்தின் ஒளிப்பதிவினை ஏ.மணிகண்டன் சிறப்பாக கையாண்டு உள்ளார்.அவரது கேமரா கோணங்களும் ஒளி அமைப்புகளும் காட்சிகளுக்குள் ரசிகர்களை ஒன்ற வைக்கிறது. அதேபோல் டாக்டர் செல்லையா பாண்டியன் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார் அவரது பின்னணி இசையும் கதையோட்டத்துடன பயணித்துள்ளதுபடத்தொகுப்பாளர் ,. எம் எஸ் கோபியின் கைவண்ணம் திரைக்கதையை விறுவிறுப்பாக்கியுள்ளது .மந்திர தந்திரங்கள் நிறைந்த ஹாரர் கதையை வயதான மூதாட்டியின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு நன்கு படமாக்கியுள்ளார் இயக்குனர் விஜயகுமாரன்.

மொத்தத்தில் இந்த  ‘க்ராணி’, ஹாரர் பட திரை ரசிகர்களுக்கு மற்றும் ஒரு திகில் திரைவிருந்து.

Spread the love