Thursday, April 16

ஜாக்கி- திரை விமர்சனம்

தமிழ் சினிமாவுல சேவல் சண்டை ,ஜல்லிக்கட்டு போன்ற மண் மணக்கும் கிராமிய விளையாட்டுக்கள் சார்ந்த சில படங்கள் திரைக்கு வந்ததுண்டு ,அந்த வரிசையில் கிடா சண்டையை மையமாக வைத்து கதையம்சம் கொண்ட படமாக இந்த ஜாக்கி திரைப்படம் வெளிவந்திருக்கிறது .

ஆட்டோ ஓட்டுனர் ஆன யுவன் கிருஷ்ணா,காளி என்ற கிடாவை வளர்த்து வருகிறார், அந்த கிடா சண்டையில் களமிறக்கப்பட்டால் அதனுடன் மோதும் கிடாக்களை வெல்லுவதில் சிறந்த கிடா வாக திகழும் பெருமை பெற்றது. அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணாவும் கிடா வளர்ப்பில் ஆர்வமாக உள்ளார் ,ஒரு சமயம் யுவன் கிருஷ்ணாவின் கிடா, ரிதன் கிருஷ்ணாவின் கிடாவுடனான மோதலில் வெற்றி பெறுகிறது ,இந்த வெற்றி ,கிடா உரிமையார்களிடையே இடையே பகைமையை உருவாக்குகிறது இதனால் அவர்களுக்கு இடையே மோதல்கள் வெடிக்கின்றன ,அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பகையை, அதே கிடா சண்டையை வைத்தே முடிவுக்கு கொண்டுவர அந்த ஊரின் முக்கிய புள்ளிகள் முடிவு செய்கிறார்கள். இதன்பிறகு என்ன நடந்தது என்பது தான் ஜாக்கியின் மீதி கதை.

ஜாக்கி படத்தில் நாயகனாக யுவன் கிருஷ்ணா, அச்சு அசலாக மதுரை பகுதியைச் சார்ந்த இளைஞனை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்.அவருக்கு இணையாக வில்லனாக நடித்துள்ள கிருஷ்ணாவும் தன்னுடைய துணிவான நடிப்பின் மூலம் தான் ஏற்று இருக்கக்கூடிய கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்துள்ளார் நாயகியாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார் அவரும் அவரது கதாபாத்திரத்திற்கு தக்கபடி குறைவில்லாத நடிப்பை வழங்கி இருக்கிறார் மற்றும் மது சுதன் ராவ் ,சரண்யா ரவி, பத்மன் ,சாய் தினேஷ் என பல நடிகர்கள் பல மண் மணக்கும் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்துள்ளார்கள்.

என்.எஸ் உதயகுமாரின் ஒளிப்பதிவு  கிராமிய வாழ்வியலை ,கண்களுக்கு நிறைவாக,படமாக்கி கொடுத்துள்ளது. அதேபோல இசையமைப்பாளர் சக்தி பாலாஜியின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன, பின்னணி இசை கதையோடு பயணித்து,படத்தின் காட்சிகளுக்கு பெரிய உறுதுணையாக அமைந்துள்ளது. கிடா சண்டை என்னும் ஒரு கருத்தை மையமாகக் கொண்டு,கிராமியம் சார்ந்த கதாபாத்திரங்களை அமைத்து, விறுவிறுப்பான திரைக்கதையுடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் டாக்டர் பிரகாபல் .கிராமத்து கலாச்சார அம்சங்களை நகர பகுதிகளில் இருப்பவர்க்ளும் அறிந்துகொள்ளும் வண்ணம் இந்த படத்தை அவர் உருவாக்கியுள்ளார்

மொத்தத்தில் ஜாக்கி, மண் மணக்கும் கிராமிய சூழலை பதிவு செய்வதில் வெற்றி கண்டுள்ளது.

Spread the love