பழங்குடியினரின் தலைவரான விமல் ,.ஓரு யானையை வளர்த்து வருகிறார், அந்தப் பகுதியில் உள்ள கோவிலில் இருக்கும் யாளிஸ்வரன் சிலையை வனத்துறை அதிகாரியான ஜான் விஜய் கைப்பற்ற நினைக்கிறார், விமலின் யானைக்கு மதம் பிடித்து அது அவரது மகளை தாக்கி விட்டு காட்டுக்குள் சென்று விடுகிறது ,காட்டுக்குள் சென்ற அந்த யானை என்னவானது ?அதனை விமலால் கண்டுபிடிக்க முடிந்ததா ?அதேபோல கலவியை போக இருந்த சிலையை விமலால் காப்பாற்ற முடிந்ததா? இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் விடையை செல்கிறதுமகாசேனா திரைப்படத்தின் மீதி கதை .

கதையின் நாயகனாக நடித்துள்ள விமல் தனது வழக்கமான பாணியில் இந்த படத்திலும் தன்னுடைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார், நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார் ,இவரது கதாபாத்திரமும் அதை இவர் ஏற்று நடித்திருப்பதும் நன்றாக உள்ளது ,வனத்துறை அதிகாரியாக நடித்துள்ள ஜான் விஜய் தன்னுடைய பாணியில் இந்தப் படத்திலும் தன் பிராண்ட் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் .மேலும் யோகி பாபு ,மகிமா குப்தா,கபீர் துஹான் சிங் மற்றும் பலரும் அவரவர் கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள்.
அழகிய மலை கிராமங்களை சிறப்பாக தன்னுடைய ஒளிப்பதிவின் மூலம் பதிவு செய்துள்ள மனோஜ் பாபு வின் பணி ரசிக்கும்படி உள்ளது . பிரவீன்குமார் எஸ் என் அருணகிரி பாடல்களுக்கான இசையினையும் உதய பிரகாஷ் படத்திற்கான பின்னணி இசையினையும் அமைத்துள்ளார்கள் ,பாடல்களை காட்டிலும் பின்னணி இசை காட்சிகளுக்கு இணக்கமாக கதையோடு பயணித்துள்ளது.
தினேஷ் கலைச்செல்வன் இந்த படத்தை இயக்கி உள்ளார் ,வனம் சார்ந்த ஒரு கதையினை எடுத்துக்கொண்டு மனிதன், இயற்கை ,தெய்வீகம் ஆகியவற்றின் இடையிலான நம்பிக்கையையும் ஒற்றுமையையும் பற்றி பேசும் படமாக இந்த படத்தின் காட்சிகளை கொண்டு செல்கிறார்.
ஒருபுறம் யானை, மறுபுறம் சிலை கடத்தல் இவையன்றி மாணவர்களின் மலை ஏறுதல் என்ற மூன்று கதை அம்சங்களை இணைக்க கூடிய விதத்தில் படத்தை தினேஷ் கலைச்செல்வன் உருவாக்கி இருக்கிறார். கதை கருவுக்கு ஏற்ற வண்ணம் திரைக்கதையின் காட்சிகளில் முழு ஈடுபாட்டுடன் கதை நகர்த்தப்பட்டுருந்தால் அது ஒட்டுமொத்த படத்திற்கும் பலம் சேர்த்து இருந்திருக்கும்.
