மனிதர்களில் சில பேர் என்னதான் ஒரே மாதிரி தோற்றத்துல காணப்பட்டாலும் ஒவ்வொருத்தருக்கும் அவங்களுடைய கைரேகை அப்படிங்கறது மாறுபட்டு தான் இருக்கும் அப்படிங்கறத யாருமே மறுக்க முடியாது .இப்ப ரேகை இணையத்தொடரோட கதைக்கு வருவோம் .மாணவர் விடுதியில் ஒரு இளைஞன் மர்மமான முறையில இறந்து கிடக்கிறான் . அந்தப் பகுதியின் அருகில் இருக்கிற குற்றாலம் காவல் நிலையத்தில் பாலஹாசன் இன்ஸ்பெக்டராக இருக்காரு , அவரே இந்த மரணத்தோட காரணம் என்ன ?அப்படிங்கறதை பற்றி புலன் விசாரணையில் இறங்குறாரு, அதே சமயத்துல வெவ்வேறு ஏரியாவுல மேலும் நாலு இளைஞர்கள் மரணமடைகிறதும் ,அவங்க எல்லாருடைய கைரேகையும் ஒரே மாதிரி இருக்கிற தகவலும் கிடைக்கப்பெறுகிறது ,இந்த கொலைகளை செய்தது யார் ? இந்த கைரேகையோட மர்மங்கள் என்ன ? இது எல்லாம் விரிவா எடுத்துச் சொல்வது தான் ரேகை சீரீஸ் ஓட எபிசோடுகள்.

தன்னுடைய கிரைம் கதைகள் மூலமாக எண்ணற்ற வாசகர்களை கொண்டிருந்த கிரைம் கதை மன்னன் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலை மையமாகக் கொண்டு இந்த ரேகை வெப் சீரிஸ் எடுக்கப்பட்டு ஜி5 ஓடீடி தளத்தில் வெளியாகி உள்ளது .இந்த இணைய தொடரின் கதாநாயகனாக பாலஹாசன் காவல்துறை கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பொருந்தக்கூடிய உடல் மொழியில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார். பவித்ரா ஜனனி கான்ஸ்டபிள் ஆக தன்னுடைய கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பினை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார் .வினோதினி வைத்தியநாதன் புதிய பரிமாணத்தில் இதுவரை தான் ஏற்று நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில். அரசாங்க மருத்துவராக நன்கு நடித்துள்ளார்.
பொதுவாக க்ரைம் திரில்லர் கதைகளுக்கு ஒளியும் ஒலியும் மிகவும் முக்கியமானது இவை இரண்டும்தான் அது படமாக இருந்தாலும் சரி ,இணைய தொடராக இருந்தாலும் சரி பார்க்கும் ரசிகர்களை கதையோடு ஒன்றி பயணிக்க வைக்கும், அந்த வகையில் இந்த படத்திற்கான ஒளிப்பதிவினை சிறப்பான முறையில் அமைத்துள்ளார் மகேந்திரன் எம் .ஹென்றி .காட்சிகளுக்கு ஏற்ற வேகத்தினையும் விறுவிறுப்பினையும் தனது பின்னணி இசையின் மூலம் ஆர். எஸ் .ராஜு பிரதாப் கொடுத்துள்ளார். அதேபோல படத்தொகுப்பாளர் துரை பிரகாஷ் தொடரின் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்புக்கு குறை இல்லாத வகையில் தன்னுடைய பங்குக்கு சிறப்பான பணியினை கொடுத்துள்ளார்.
பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் நாவலை அடிப்படையாக கொண்டு இந்த விறுவிறுப்பான தொடரை எழுதி இயக்கியிருக்கிறார் எம் தினகரன். அனைத்து தொடர்களிலும் நிறைய திருப்பங்கள், விறுவிறுப்பாக நகரும் காட்சிகள் ,அடுத்தடுத்த பகுதிகளில் வரக்கூடிய சம்பவங்களை பற்றிய எதிர்பார்ப்புகள் என சிறப்பான ஒரு க்ரைம் தில்லர் தொடரை தினகரன் உருவாக்கியுள்ளார் .
மொத்தத்தில் இந்த ரேகை, க்ரைம் திரில்லர் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கக் கூடிய சிறப்பான விஷுவல் ட்ரீட்.
