Friday, April 24

‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ விமர்சனம்

‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ -நல்லதொரு திரைமொழியில் உருவாக்கப்படுள்ள கிராமிய வாழ்வியல் பதிவு.

பரோட்டா முருகேசன் கிணத்துல விழுந்த மகனை எப்படியாவது காப்பாற்றினால் முனியாண்டிக்கு கெடா வெட்டுவேன்னு வேண்டுகிறார். தவறி விழுந்த அவருடைய மகன் உயிர் பிழைச்சு வராரு, அவருடைய மகன் சின்ன வயசுல இந்த நிகழ்வு நடக்குது, முருகேசன் வேண்டிக் கொண்ட கிடாயும் வளர, அவருடைய பையனும் வளராரு. ஆனா சில வருஷங்களாகியும் அவருடைய வேண்டுதல நிறைவேற்ற முடியாமல் போகுது அதுக்கு காரணம் என்னன்னா அந்த ஊர்ல ரெண்டு பணக்காரர்களுக்கு இருக்கிற பிரச்சனைனால ஊருக்கு பொதுவா இருக்கிற முனியாண்டி கோயில்ல எந்த வழிபாடும் நடக்கிறது இல்லை. பல வருடங்களா இந்த பிரச்சனை இருந்து கொண்டிருக்க ,முருகேசன் எப்படியாவது தன்னுடைய வேண்டுதல நிறைவேற்றிட வேண்டும் என்று ரெண்டு பணக்காரர்கள் கிட்டயும் போய் பேசி பார்க்கிறார். ஆனா அவர அவுங்க உதாசீனப்படுத்தறாங்க ,அதோட மட்டுமில்லாமல் கிடாவ நல்ல விலைக்கு வித்துறணும் ,உன்னுடைய வேண்டுதல இப்போதைக்கு நிறைவேற்ற முடியாதுன்னு பல பேரும் முருகேசனுக்கு அறிவுரை சொல்றாங்க, ஆனா அது மாதிரி பண்ணுணா சாமி குத்தம் ஆயிடும்னு நம்பற முருகேசன் என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறாரு, அரசாங்கம் மழை பெய்யற தண்ணிய சேர்த்து வைக்க குளம் உருவாக்க அனுமதி தராங்க அதுக்கு ஒரு அஞ்சு ஏக்கர் தேவைப்படும் சொல்றாங்க பல ஏக்கர்கள் வைத்திருக்கிற பெரிய பண்ணாடி, ஊர் மக்கள் எல்லாம் தன்னுடைய தோட்டத்தில தனக்கு கீழே வேலை பார்க்கிற நிலைய உருவாக்கணும்னு ஒரு சூழ்ச்சி திட்டம் போடுறாரு ,அவருடைய திட்டத்துக்குள்ளார முருகேசன் உடைய வேண்டுதலும் சிக்கிக் கொள்ள ,கடைசில முருகேசன் உடைய வேண்டுதல் நிறைவேறிச்சா? இல்லையா? வளர்ந்து நிற்கிற கிடாவின் நிலைமை என்ன? சதிவலை போடுகிற பெரிய பண்ணாடியின் திட்டம் நிறைவேறிருச்சா ? இல்லையா? இந்த பிரச்சனைகளுக்கு ஏற்படுகின்ற தீர்வு என்ன ?என்பதுதான் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ படத்துடைய முடிவு.படத்தில் கதாபாத்திரத்தின் கதையின் நாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பல்வேறு பொறுப்புக்களை ஏற்று படத்தை தன் நடிப்பின் மூலம் சுமந்து சென்றிருக்கும் பரோட்டா முருகேசன் நல்ல பாடன் ஆக மிக சரியான கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். நடிப்பில் பல்வேறு விதமான பரிமாணங்களை வெளிப்படுத்தி பல இடங்களில் அனுதாபத்தை அவரின் வலியை மிக நேர்த்தியாக படம் பார்ப்பவர்களுக்கு உணர்த்திருக்கிற முருகேசனை நிச்சயம் பாராட்டலாம் சிறந்த குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வர வாழ்த்துக்கள்.

பணக்காரர்களாக நடித்திருக்கின்ற கார்த்திகேசன் விவரமாகவும் வில்லங்கமாகவும் நடித்திருக்கிறார் மற்றொரு பணக்காரராக நடித்திருக்கிற முருகன் சோம்பேறியாகவும் அடுத்தவரை எப்படி வேலை வாங்க வேண்டும் என்ற தெளிவோடும் பல இடங்களில் நம்மை மகிழ்ச்சி படுத்தியிருக்கிறார். தங்கம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிற சித்ரா நடராஜன் மாப்பிள்ளையாக வரும் சேனாபதி விஜயன் மற்றும் விகடன் போன்ற நடிகர்கள் அனைவரும் எவ்விதமான சினிமாவின் சாயலுமின்றி ,அரிதாரம் இல்லாத, அலட்டிக் கொள்ளாத கிராமத்து மனிதர்களாக மாறி படம் முழுக்க வியாபித்து கதை நிகழும் கிராமத்தில் நம்மை பயணிக்க வைத்திருக்கிறார்கள்.

படிப்பதற்கு சுவாரசியம் கொண்ட கதையை வெகுஜனம் படங்களின் வரிசையில் கொண்டு வர முயற்சி செய்திருக்கிற ஒளிப்பதிவாளர் விமலின் காட்சிப்பதிவும், சுவாரசியம் குறையாமல் தேவையான இடங்களில் நேர்த்தியான பின்னணி இசையினை கொடுத்திருக்கிற என் டி ஆர் (நட்ராஜன்சங்கரன்) மட்டுமில்லாமல் சதீஷ் குரசோவாவின் படத்தொகுப்பும் படத்திற்கு பக்க பலம்.

.
ஒருவரின் வேண்டுதலை கதையாக கையில் எடுத்து அதற்கு தேவையான கதாபாத்திரங்களுக்கு ,பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து ,அவ் வேண்டுதலை வைத்தே சுவாரசியம் குறையாமல் பல பிரச்சனைகளையும், பல சாதிய வேறுபாடுகளையும், ஏழ்மைக்கும் ஆளுமைக்கும் இடையே இருக்கிற இடைவெளியையும் மிகச் சரியாக பதிவாக்கி, சாதி பாகுபாட்டை பட்டவர்தனமாக சொல்லாமல் காட்சிகள் மூலமாக சாமர்த்தியமாக சொல்லி, யதார்த்தமான படத்தை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சுகவனம்.

மொத்தத்தில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ – நல்ல ப(பா)டம்.

Spread the love