Friday, April 24

பிபி180 -திரை விமர்சனம்

விபத்தில் மரணம் அடைந்த தன் மகளின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டாம் என மருத்துவ அதிகாரியான தான்யாவிடம் பாக்யராஜ் கேட்கிறார், ஆனால் மருத்துவ அதிகாரி தான்யா அதற்கு சம்மதிக்க மறுக்கிறார், இதனால் தன் நண்பரின் மகளுக்காக அந்த ஏரியா தாதா டேனியல் பாலாஜி, தான்யாவை மிரட்டுகிறார், தனது அடியாட்களை கொண்டு தான்யாவின் மருத்துவமனையும் அடித்து துவம்சம் செய்கிறார் ஆனால் நேர்மையான மருத்துவ அதிகாரி தான்யா, எதற்கும் அஞ்சாமல் தன்னுடைய கடமையில் உறுதியாக இருக்கிறார். இதனால் அவர் மீது ஆத்திரமடையும் டேனியல் பாலாஜி தான்யாவை பழிவாங்க துடிக்கிறார் இறுதியில் என்ன நடந்தது ?தான்யா வெற்றி பெற்றாரா ?அல்லது டேனியல் பாலாஜிக்கு வெற்றி கிடைத்ததா?என்பதுதான் படத்தின் மீதி கதை.

தமிழ் சினிமாவில் நாயகியருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்கள் வருவது அரிதான ஒன்று .அந்த வரிசையில் இந்த படமும் நாயகியின் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த கதாபாத்திரத்தில் தான்யா ரவிச்சந்திரன் சிறப்பாக நடித்துள்ளார், தங்கம் என்னும் கதாபாத்திரத்தில் நேர்மைக்கு இலக்கணமாக தன்னுடைய கடமையில் கண்ணும் கருத்தும் இருக்கக்கூடிய மருத்துவ அதிகாரியாக நடித்துள்ள இவரின் நடிப்பு பாராட்டும் வகையில் உள்ளது. இவருக்கு அடுத்தபடியாக அர்னால்டு என்னும் தாதா கதாபாத்திரத்தில் டேனியில் பாலாஜி நடித்துள்ளார் .அவரது மறைவிற்கு பிறகு வெளிவந்துள்ள இந்த திரைப்படம் ஒரு நல்ல நடிகரை தமிழ் சினிமா இழந்துவிட்டது என்ற எண்ணத்தை மனதில் பதிய வைக்கும் வகையில் இவரது நடிப்பு இந்த திரைப்படத்தில் ரசிகர்களை மிகவும் கவரும் மகையில் உள்ளது .மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் கே பாக்யராஜ் நடித்துள்ளார் இவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்தில் தன்னுடைய அனுபவ நடிப்பை நன்கு பதித்துள்ளார் .மேலும் அருள் தாஸ் ,தமிழ் போன்றவர்களும் நன்கு நடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் ராமலிங்கத்தின் கை வண்ணத்தில் பட காட்சிகள் கதையோட்டத்துடன் பயணித்து ரசிக்கும்படி உள்ளது .படத்திற்கு இசை ஜிப்ரான், இவரது பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப ,கதாபாத்திரங்களின் நகர்விற்கு ஏற்ப நன்கு அமைக்கப்பட்டுள்ளது. புதிய கதை களத்தில் விறுவிறுப்பான திரைக்கதை காட்சிகளோடு நாயகிக்கு முக்கியத்துவம் தரக்கூடிய ஒரு படத்தை இயக்குனர் JP கொடுத்துள்ளார் .மருத்துவமனை ,உடற்கூறாய்வு, மருத்துவர்கள் என சுற்றி பயணிக்கும் கதைக்கு பொருத்தமாக பிபி 180 என்ற தலைப்பையும் இயக்குனர் வைத்துள்ளார்.

மொத்தத்தில் பிபி180 ரசிகர்களின் பல்ஸை எகுற வைக்கும்.

Spread the love