Tuesday, April 21

‘இரவின் விழிகள்’- திரைப்பட விமர்சனம்

மகேந்திரன் நீமா ரே ,நிழல்கள் ரவி, சிக்கல் ராஜேஷ், சிசர் மனோகர் மற்றும் பலர் நடிக்க, சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ள திரைப்படம் ‘இரவின் விழிகள்’இந்த படத்துக்கு ஒளிப்பதிவு பாஸ்கர், எடிட்டர் ஆர் ராமர், இசை ஏ. எம். அசார். தயாரிப்பு மகேந்திரன்.

இன்றைய நவநாகரீக தொழில்நுட்ப உலகில் சமூக ஊடகங்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்று என்று ஆகிவிட்டாலும் அத்தகைய சமூக வலைத்தளங்களில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளும் சிலர் அதிலிருந்து பொருளீட்டவும், சுய விளம்பரத்திற்காகவும், செய்யக்கூடிய பல செயல்கள் வரம்புகளை மீறியே உள்ளன ,அத்தகைய நபர்களை ஒருவர் அட்டவணைப்படுத்தி கொலை செய்கிறார். அவர் யார்? இத்தகைய கொலைகளை அவர் செய்வதற்கான காரணம் என்ன? இதுவே இரவின் விழிகள் படத்தின் கதை .

இந்த படத்தின் கதையின் நாயகனாக கர்ணா என்னும் கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடித்துள்ளார் நாயகியாக ரேஷ்மா என்னும் கதாபாத்திரத்தில் நீமா ரே நடித்துள்ளார்.இவர் கன்னடத்தில் வெளியான பங்காரா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர். மேலும் கருப்பு என்ற கதாபாத்திரத்தில் இந்த படத்தை இயக்கியுள்ள இயக்குனர் சிக்கல் ராஜேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, போன்றவர்களும் கதையில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொருவரும் தங்களுடைய பங்களிப்பினை படம் முழுவதும் கொடுத்து இருக்கிறார்கள்.

படத்தின் பாடல்களைப் பொறுத்தவரை இந்த படத்திற்கு இசையமைத்திருக்கக்கூடிய ஏ. எம் .அசார் தன்னுடைய பங்கிற்கு பாடல்களிலோ, பின்னணிஇசையிலோ பெரிய அளவில் குறை வைக்காமல் நிறைவான பணியை செய்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவாளராக பாஸ்கர் பணிபுரிந்துள்ளார் .காட்சிகளுக்கு இணக்கமான பட பதிவினை குறிப்பாக இரவு நேர காட்சிகளை நன்கு படமாக்கி உள்ளார்.விடுதலை படத்தின் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் இந்த படத்தின் படத்தொகுப்பை கையாண்டுள்ளார் . சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா ஆகியோரும், நடனத்தை எல்.கே ஆண்டனியும் நன்கு வடிவமைத்துள்ளனர்.

இன்றைக்கு ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சமூக ஊடகங்களின் பங்களிப்பும் அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களும் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகவே மாறிவிட்டது ,ஆனால் அதை ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ளாமல், அதிலேயே மூழ்கி இருப்பதோடு, சில எல்லை மீறிய செயல்களையும் சிலர் செய்து வருகிறார்கள், இதனைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை சொல்லும் வகையில் இயக்குனர் சிக்கல் ராஜேஷ் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் .

வணிக ரீதியான அம்சங்களோடு ,அதே சமயத்தில் எளிமையான படமாக சைக்கோ திரில்லர் ஜானரில் படத்தினை உருவாக்கி ,அதில் ஒரு சமூக கருத்தையும் இயக்குனர் சொல்லி இருக்கிறார் .

மொத்தத்தில் இந்த ‘இரவின் விழிகள்’ சமூக ஊடகங்களின் மறு முகத்தை பற்றி பேசும் விழிகள்.

Spread the love