Thursday, April 23

வட்டக்கானல்- திரைவிமர்சனம்

வட்டக்கானல் திரைப்படத்தில் துருவன் மனோ,மீனாட்சி கோவிந்தராஜ், ஆர். கே. சுரேஷ், மனோ, ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இசை மாரிஸ் விஜய், ஒளிப்பதிவு எம் .ஏ. ஆனந்த்.

அதிகம் போதை தரக்கூடிய விளைவு உயர்ந்த காளான் வகையான ஒரு வகை செடி கொடைக்கானல் பகுதியில் வட்டக்கானல் என்ற பகுதியில அதிகமா கிடைக்குது ,இயற்கையாக உருவாகிற இந்த காளான் அதிக போதை தரும் பொருளாக பார்க்கப்படுது, இந்த விலை உயர்ந்த வியாபார சந்தை அப்பகுதியில் இருக்கிறது என்ற தகவல் வெளியில யாருக்கும் தெரியாமல் இருக்குது ,ஆனா அந்த பகுதியை தன்னோட கட்டுப்பாட்டுக்குள் வச்சிருக்கற ஆர் கே சுரேஷ் இந்த வியாபாரத்தை பெரிய அளவுக்கு செஞ்சு வருமானத்தை பெருக்கணும்னு முடிவு பண்றாரு ,இதனால கொடைக்கானலுக்கு வர சில இளைஞர்களுக்கு காளான் வகையான போதை பொருட்கள் கொடுத்து உச்சத்துக்கு கொண்டு போறதோட, அவங்க கொலையும் செய்யப்படறாங்க, இதனால போதைப் பொருள் வட்ட காணல்ல கிடைக்குது என்ற தகவல் பலருக்கும் தெரிய வருது ,ஆர் கே சுரேஷின் அராஜகங்களுக்கும் அட்டூழியங்களுக்கும் பக்க பலமாக துருவன் மனோவும் ,அவருடைய நண்பர்களும் இருக்கிறாங்க, இந்த சூழ்நிலையில் அதே பகுதியில உள்ள 200 ஏக்கர் கொண்ட தோட்டத்தை எப்படியாவது தான் வாங்கணும்னு என்பது ஆர் .கே. சுரேஷின் நீண்ட நாள் கனவாக உள்ளது , அந்த எஸ்டேட்டிற்கு சொந்தமான மனோ , ஒரு விபத்துல இறந்து போக ,தன் கண் முன்னாடி தன் அப்பாவை இழந்த ஹீரோயின் அந்த சம்பவத்தை நேரில் பார்ப்பதனால் அடையும் அதிர்ச்சியில் அவங்களுக்கு பேச முடியாமல் போகுது , அம்மாவையும் அப்பாவையும் இழந்த ஹீரோயினின் பாட்டி எஸ்டேட்ல வேலை செய்றவங்கள நீங்களே எஸ்டேட்டை பாத்துக்கோங்க என்று சொல்லிட்டு பேத்தியை கூப்பிட்டுகிட்டு டெல்லிக்கு போறாங்க ,இதனால அந்த இடத்துக்கு சொந்தக்காரராக இருக்கிற ஹீரோயின் திரும்பி வர ,அப்பாவின் ஆசைப்படியே தன்னுடைய எஸ்டேட்டில் பல வருஷங்களா வேலை பாக்குற தொழிலாளர்களின் பெயரில் அதை எழுதி கொடுக்கணும்னு முடிவு பண்றாங்க ஹீரோயின். அதோட மட்டுமில்லாமல் இடையில துருவனுக்கும் ஹீரோயினுக்கும் காதல் ஏற்படுது,, தொழிலாளர்களுக்கு பத்திரத்தை மாத்தி கொடுப்பதற்காக ரெஜிஸ்டர் ஆபீஸ் வரைக்கும் போற தகவல் ஆர்கே சுரேஷ் தெரிய வருது.எப்படியாவது அந்த இடத்தை தன் பெயருக்கு மாத்தணும்னு நீண்ட நாள் கனவாக இருந்தது ?எங்க தகர்ந்து போயிடுமோ ,.என்று நினைக்கிற ஆர்கே சுரேஷ் ,பல சூழ்ச்சிகளை சாதுரியமாக செய்றாரு அந்த சூழ்ச்சியில் அனைவரும் சிக்க கடைசியில யாருக்கு என்ன நடந்தது ?பல ஏக்கருள்ள அந்த இடம் தொழிலாளர்களுக்கு கிடைத்ததா ?ஆர்.கே. சுரேஷ் கிட்ட கிடைத்ததா ?என்பதுதான் வட்டக்கானல் படத்துடைய மீதி கதை

பாடகர் மனோவின் மகன் துருவன் மனோ, .இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஆர். கே. சுரேஷின் செல்லபிள்ளையாகவும் ,அதே நேரத்தில் அடிதடிகளுக்கு ஏற்ற வண்ணமும் நடிச்சிருக்காரு, நட்பு, வன்மம் துரோகம், காதல் போன்ற பரிமாணங்களுக்கு ஏற்ற மாதிரி துருவன் மனோ நடித்திருந்தாலும் , அறிமுகத்திற்கே உண்டான சிறு பதட்டம்., பயம்  வெளிப்பட்டு இருப்பதை சில காட்சிகளில் பார்க்க முடிகிறது ,இனிவரும் படங்களில் அதனை தவிர்த்து தன் நடிப்பினை நன்கு வெளிப்படுத்துவார் என்று நம்பலாம்.

எம். ஏ. ஆனந்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் இனிமையாக படமாக்கப்பட்டுள்ளன .இந்த படத்துக்கு இசை மாரிஸ் விஜய் ,இவரது இசையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் பின்னணி இசை இருந்தாலும், பாடல்களில் இன்னமும் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த படத்தை இயக்கியிருக்கிறார் பித்தாக் புகழேந்தி,.எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்கு தேவையான வகையில் இன்னமும் திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டி இருந்தால் அது ஒட்டுமொத்த திரை வடிவத்திற்கு பலம் சேர்த்திருக்கும்

Spread the love