தமிழ் சினிமாவில் முற்றிலும் மாறுபட்ட கதை இது ஒரு மிக வித்தியாசமான படம் புது முயற்சியில் செய்திருக்கிறோம் என்று சொல்வது வழக்கமான சொல்லாடலாக மாறிப் போய்விட்டது. இதனை படம் வெளிவருவதற்கு முன்பும் நாம் கேட்டிருப்போம் ஆனால் வெகு சில படங்கள் அதை உறுதிப்படுத்தியும் வெற்றி பெற்றும் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அமைந்திருக்கு. ஆனால் வழக்கத்திற்கு மாறாக முற்றிலும் வித்தியாசமான திரைக்கதை என சொல்லாடலுக்கு உரித்தான படமாக கவனிக்க தவறிய மக்களின் மாண்பை ஆரியன் படம் பதிவு செய்திருக்கு.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தொகுப்பாளினியாக இருக்கிறார் வெறும் தொகுப்பாளர் ஆக மட்டுமில்லாமல் அவர் எழுப்பும் கேள்விகள் மக்களின் மனங்களை பிரதிபலிக்கும் விதமாகவும் இருப்பதால் அந்த ஒரு மணி நேர நேரலை நிகழ்ச்சிக்கு மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஆதரவும் ஏற்படுகிறது , அரசியல்வாதி ஒருவர் கடைசி நேரத்தில் அந்த நேரலையில் கலந்து கொள்ள முடியாது என்று சொல்கிறார் அவருக்கு பதிலாக அன்றைய தேதியில் பிரபலமாக இருக்கும் நடிகர் ஒருவரை வரவழைக்கிறார்கள் நிகழ்ச்சி தொடங்கி நேரலையில் , கேட்கப்படும் கேள்விகளுக்கு மத்தியில் பார்வையாளர்கள் வரிசையில் இருந்து செல்வராகவன் சில கேள்விகளை எழுப்ப அந்த இடம் பிரச்சனையாகிறது ஒரு கட்டத்தில் செல்வராகவன் துப்பாக்கியை எடுத்து அந்த கதாநாயகனை சுட அவர் காலில் அடிபடுகிறது, இவை அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, மக்கள் மத்தியில் என்ன நடக்கிறது என்பதை புரியாமல் திகைத்துப் போகிறார்கள், போலீசும் புடை சூழ போலீசும் அந்த இடத்தை முற்றுகை இட, துப்பாக்கியுடன் இருக்கும் செல்வராகவனின் கோரிக்கை என்ன? என்பதை கேட்கிறார்கள். அதற்கு செல்வராகவன் இன்றிலிருந்து ஆறு நாட்களுக்கு ஒவ்வொரு கொலையாக நடக்கப் போவதாகவும் ,அவரின் பெயர் மட்டும் ஒரு மணி நேரத்திற்கு முன் சொல்லப் போவதாகும் ,அதற்கான முதல் கொலை ,தற்போது இங்கே நடக்கப் போகிறது என்று சொல்ல, போலீசும் அங்கு இருப்பவர்களும் மக்களும் அதிர்ச்சி அடையறாங்க. அடுத்து நடக்கப் போகும் கொலைகளை தடுக்க போலீஸ் குழு விஷ்ணு விஷால் தலைமையில தனி டீம் அமைக்கிறாங்க. செல்வராகவன் சொன்னது போலவே அடுத்த நாளும் ஒரு மணி நேரத்திற்கும் முன்பாக செல்வராகவன் தோன்றி பெயர் மட்டும் சொல்கிறார், சொன்ன ஒரு மணி நேரத்தில் அந்தப் பெயர் கொண்ட நபர் இறந்து போகிறார். தெரிந்த பிரபலமான நபர்கள் இல்லாமல் இருப்பதினால் எந்த பக்கத்தில் இருந்து இதை தடுப்பது என விஷ்ணு விஷாலும் அவருடைய டீமும் பல முயற்சிகள் செய்றாங்க. அடுத்தடுத்து நாட்கள் வெவ்வேறு ஊடகத்தின் வாயிலாக செல்வராகவன் தோன்ற தொடர் கொலைகளும் நடக்கின்றது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போற விஷ்ணுவும் அவருடைய குழுவும் எப்படி மீதி உள்ள நபர்களை காப்பாற்றினார்கள்? எதற்காக செல்வராகவன் இந்த கொலைகளை செய்க்கிறார்? அவரின் நோக்கம் என்ன? கொலைக்கான அடிப்படை காரணம் என்ன? என்பதுதான் ஆரியன் என்னும் படைப்பின் கடைசி அத்தியாயம்.
கதாநாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால் ஒரு க்ரைம் சப்ஜெக்டுக்கு ஏத்த மாதிரி போலீஸ் அதிகாரியாக மிடுக்காக உள்ள அவரது தோற்றமும், உடல் மொழியும் நேர்த்தியாக கனக்கச்சிதமாக அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பொருத்தமா இருக்காரு . காதலித்து மணமுடித்த மனைவி பிரிந்து போனாலும் கூட கடமைதான் முக்கியம் அதுவே முதன்மையானது என நடித்திருக்கும் விஷால், தன் நடிப்பில் பர்சனல், ப்ரொபஷனல் என்று தனித்தனியாக நடிப்பில் வேற்றுமையை ஏற்படுத்தி இருக்கிறார். தொய்வில்லாத திரைக்கதைக்கு மேலும் வலு சேர்த்து அதன் வேகத்துக்கு தன் நடிப்பாலும் ஈடு கொடுத்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் இயக்குனர் செல்வராகவன் தனது இயல்பான நடிப்பின் மூலமாக ரசிகர்கர்களின் மனதில் இடம் பிடிக்கிறார் இவர் அடுத்ததாக யாரை கொலை செய்யப்போகிறார் ? என்னும் படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் ஓர் படபடப்பான பரபரப்பினை ஏற்படுத்தும் வகையில் உள்ள கதாபத்திரத்துக்கு தன சிறப்பான நடிப்பின் மூலம் மேலும் பலம் சேர்த்துள்ளார்
தொலைக்காட்சியில் நேர்காணல் செய்யும் பணியில் உள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத்த்தும், விஷ்ணு விஷாலின் மனைவியாக நடித்துள்ள மானசா சௌத்ரியும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிப்பை நன்கு வெளிப்படித்துள்ளார்கள் .

க்ரைம் திரில்லர்பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரானின் பின்னணி இசையும் காட்சிகளின் பின்புலத்துக்கு இணைக்கமாகவ நன்கு அமைந்துள்ளது.அதே போல ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் தன் ஒளிப்பதிவு மூலம் படத்தின் காட்சிகளுக்கு ஏற்ற தொரு பங்களிப்பை கொடுத்து, இயக்குனரின் எண்ண ஓட்டத்துக்கு பொருந்தும் வகையில் பக்க பலமாய் பணிபுரிந்துள்ளார். காட்சிக்கு ஏற்ற வகையில் படத்தொகுப்பாளர் ஷான் லொகேஷின் படத்தொகுப்பு பணி, ஒட்டு மொத்த படத்தின் விறுவிறுப்புக்கும் உற்ற துணையாக அமைந்துள்ளது.
பெரும்பாலும் கிரைம் சப்ஜெக்ட் கதையில் கொலைக்கான காரணமாக சுயநலம், வன்மம், பழிக்கு பழி , பகை , பதவி, பணம், சொத்து, காதல் என பல காரணங்களை மையப்படுத்தி பல படங்கள் வெளிவந்து இருக்கு . ஆனால் எதுவும் இல்லாத ஒரு முக்கியமா கருத்தை மையமாக வைத்து, கொலையாளியை யார் என்பதை முதலிலேயே சொல்லிவிட்டு அடுத்து யார் கொல்லப்படுவார்கள் என்ற பதட்டத்தை ஏற்படுத்தி விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து கதாபாத்திரங்களுக்கு ஏத்த பொருந்தக்கூடிய நடிகர்களை தேர்வு செய்து, தொழில்நுட்பாளர்களையும் இணைத்துக் கொண்டு, புதிய பாணியில் ஒரு கிரைம் திரில்லரை இயக்குனர் பிரவீன் உருவாக்கியுள்ளார்.
ஆர்யன் வித்தியாசமானவன்.
