Thursday, April 23

‘ரைட்’ திரைப்பட விமர்சனம்

RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் முக்கிய கதாபாத்திரங்க்ளில் நடிதுள்ள திரில்லர் திரைப்படம் “ரைட்”.

.போலீஸ் இன்ஸ்பெக்டர்யான நட்டி, பிரதமரின் பாதுகாப்பிற்காக போயிருக்கும் சூழலில் அவர் பணி புரியும் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் வருகிறது ,அந்த காவல் நிலையத்தில் தன் மகனை காணவில்லை என புகார் அளிக்க அருண்பாண்டியன் வருகிறார், அதேபோல திருமண பத்திரிக்கை கொடுப்பதற்காக அக்ஷரா ரெட்டி யும் அதே காவல் நிலையத்துக்கு வருகிறார், இந்த சமயத்தில் தான் அந்த காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வருகிறது , அதனால் காவல் நிலையத்திற்கு உள்ளே வந்தவர்கள் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது பிரதமர் வரக்கூடிய வேளையில் இந்த பிரச்சினையை சுமூகமாக முடித்து வைத்து விட காவல்துறை மேலதிகாரிகள் முயற்சிகள் செய்கிறார்கள் இதன்பின் என்ன நடந்தது? மிரட்டல் விடுத்த அந்த நபர் யார் ?அவரை காவல்துறை கண்டுபிடித்ததா ?காவல் நிலையத்தின் உள்புறம் மாட்டிக்கொண்டு தவிப்பவர்களின் நிலைமை என்ன ஆனது ? இதைப் பற்றி எல்லாம் சொல்வதே ரைட் படத்தின் மீதி கதை.

இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நட்டி நடித்திருக்கிறார்,படம் முழுவதும் பயணிக்க கூடிய கதாபாத்திரமாக அவரது பாத்திரம் இடம்பெறவில்லை எனினும் கதையின் மையப் புள்ளியாக அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது ,அவரும் அதனை ஏற்று திறம்பட நடித்துள்ளார்,,அதேபோல மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அருண்பாண்டியனின் கதாபாத்திரமும்,அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பினை அவர் வழங்கி இருப்பதும் நன்றாக உள்ளது மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ஷரா ரெட்டி ,மூணாறு ரமேஷ், தங்கதுரை ,வினோதினி ,ஆதித்யா ஷிவக்,யுவினா, ரோஷன் உதயகுமார் போன்றவர்களும் அவரவர்கள் கதாபாத்திரத்தில் குறைவில்லாத நடிப்பை கொடுத்துள்ளார்கள்.ஒளிப்பதிவாளர் பத்மேஷும், இசையமைப்பாளர் குணா பாலசுப்பிரமணியனும் தங்களது ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசையில் தந்துள்ள பங்களிப்பு,நேர்த்தியான திரைக்கதைக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

எடுத்துக்கொண்ட கதைக்கு திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையினை அமைத்து, அதில் இடம்பெறக்கூடிய கதாபாத்திரங்களுக்கு ஏற்றதொரு பொருத்தமான நடிகர்களையும் தேர்வு செய்து படத்தை நன்கு இயக்கியிருக்கிறார் சுப்பிரமணியன் ரமேஷ் குமார்.

மொத்தத்தில் இந்த “ரைட்” -திரில்லர் திரை ரசிகர்களுக்கு நல்லதொரு விஷ்வல் ட்ரீட் .

 

Spread the love