Tuesday, April 21

படையாண்ட மாவீரா- திரைப்பட விமர்சனம்

படையாண்ட மாவீரா திரைப்பட விமர்சனம்


பிரபலமான, செல்வாக்கு மிக்க சமூக, அரசியல் பிரமுகரான மறைந்த ‘காடுவெட்டி’ குரு அவர்களின் வாழ்க்கையினை தழுவி அமைக்கப்பட்டிருந்த கதைக்களத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஊருக்கு பல நன்மைகளை செய்து செய்து வரும் கௌதமன் அந்த ஊரில் உள்ள ஒரு பெண் ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநீதிக்காக குரல் கொடுக்க அந்த ஊரின் காவல் நிலையத்தையே தொம்சம் செய்கிறார் இதனால் அரசியல் பிரமுகர்களும் காவல்துறை அதிகாரிகளும் இதற்கு மேல் அவரது செல்வாக்கு அந்த ஊரில் அந்த பகுதியில் வளரக்கூடாது என்று முடிவு பண்ணி சில திட்டங்களை தீட்டுகிறார்கள் ஆனால் அத்தனை சூழ்ச்சி திட்டங்களையும் முறியடித்து எப்படி அவர் தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுக்கும் பாதையில் பயணித்தார் என்பதுதான் இந்த படத்தினுடைய மீதி கதை.

கதையின் மைய மற்றும் பிரதான கதாபாத்திரத்தில் வ. கௌதமன் நடித்துள்ளார், ஆக்சன் காட்சிகளிலும் உணர்ச்சிகரமான வசனங்களை பேசும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார் .கதையின் நாயகியாக நடித்திருக்கும் பூஜிதா பொன்னாடா வழக்கமான திரை கதாநாயகிகளுக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்தில் குறைவின்றி நடித்துள்ளார் ,மற்றும் தன் அனுபவ நடிப்பை பதித்து தன் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார் நடிகர் சமுத்திரகனி. மேலும் ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன், மன்சூர் அலிகான் இளவரசு, தமிழ் கௌதமன் என பிற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கலைஞர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் தங்களது பங்களிப்பை கொடுத்து கதை ஓட்டத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், கவிப்பேரரசு வைரமுத்து இவர்களது கூட்டணியில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. கதைக்கும் காட்சிகளுக்கும் பொருத்தமான பின்புலத்தை தரக்கூடிய பின்னணி இசையினை சாம்.சி.எஸ் நன்கு கொடுத்துள்ளார். ஆக்சன், சென்டிமெண்ட் என என பயணிக்கும் கதை களத்திற்கு ஏற்ற படப்பதிவினை சிறப்பாக அமைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன்.

நடந்த வாழ்வியல் சம்பவங்களையும் ,அதில் சில கற்பனை சம்பவங்களையும் இணைத்து கதைக்களம் அமைத்து, அதனை திரையாக்கம் செய்துள்ளார் இயக்குநர் வ.கெளதமன்.

Spread the love