குமரன் தியாகராஜன் நாயகனாக நடித்திருக்கும் படம் குமாரசம்பவம். இந்த படத்தை இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கி உள்ளார் . பாயல் ராதாகிருஷ்ணன், ஜி.எம் குமார், பால சரவணன், இளங்கோ குமரவேல், லிவிங்ஸ்டன் உட்பட பலர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

கதையின் நாயகன் குமரன், தாத்தா, அம்மா, தங்கையுடன் தான் வசித்து வருகிறார்.அதே வீட்டின் மாடியில் இளங்கோ குமரவேல் வசித்து வருகிறார் அவர் ஒரு சமூக சமூக ஆர்வலர்..இயக்குனராக வேண்டும் என்று கனவோடு இருக்கும் குமரன் அதற்காக பல தயாரிப்பாளர்களிடம் தன்னுடைய கதையை சொல்லியும் யாரும் அவருக்கு வாய்ப்பு தராத காரணத்தினால், குமரன் தானே படமெடுக்க முடிவு செய்து அதற்காக தன்னுடைய தாத்தாவின் வீட்டை விற்க முடிவு செய்கிறார். இந்த சூழலில் திடீரென இளங்கோ குமரவேல் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.இதனை விசாரிக்கும் காவல்துறையின் சந்தேகப்பார்வை குமரன் மீது ஏற்படுகிறது இதன் பின் என்ன நடந்தது ? இளங்கோ குமார வேலுக்கு என்ன நடந்தது ?அவரை கொன்றவர் யார்? இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து குமரானால் தப்பிக்கமுடிந்ததா ? குமரனின் கனவு நனவானதா? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தின் நாயகன் குமரன் தங்கராஜன் தன்னுடைய அறிமுக படத்திலேயே தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வண்ணம் இயல்பாக நடித்துள்ளார் , காமெடி, எமோஷன் கலந்த கதைகளத்தில் நன்கு நடித்துள்ளார் குமரன் .அடுத்து கதையின் நாயகியாக பாயல் ராதாகிருஷ்ணன் நடித்துள்ளார் ,மேலும் தாத்தாவாக வரும் ஜிஎம் குமார் மற்றும் இளங்கோ குமாரவேல் இருவரும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள் பால சரவணன் லிவிங்ஸ்டன் ,வினோத் சாகர் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவின்றி நடித்துள்ளார்கள்.
ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவும் , அச்சு ராஜாமணியின் இசையில், பாடல்களும் இயக்குனருக்கு உறுதுணையாக் அமைந்து கதையின் ஓட்டத்துக்கு பலம் சேர்த்துள்ளன . எடுக்குக்கொண்ட கதைக்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து நடிக் வைத்து ஆர்வமூட்டக்கூடிய திரைக்கதையில் நகரும் படத்தினை பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார் இருப்பினும் சில இடங்களில் மட்டும் நாடக பாணியினை தவிர்த்து, திரைக்கதையின் போக்கில் இன்னமும் வேகத்தினை கூட்டும் சம்பவங்கள் இடம் பெற்று இருக்கலாம் .
மொத்தத்தில் ‘குமார சம்பவம்’ பார்த்து ரசிக்கக்கூடிய பொழுது போக்கு சம்பவம்தான்.
