Saturday, April 25

பாம் படத்தின் வாயிலாக புதிய பரிமாணத்தில் தன் நடிப்பை மிளிர செய்திருக்கும் அர்ஜுன் தாஸ்.

பாம் படத்தின் வாயிலாக புதிய பரிமாணத்தில் தன் நடிப்பை மிளிர செய்திருக்கும் அர்ஜுன் தாஸ்.


தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை வரை திரையில் வலம் வந்த பல நடிகர்க ளுக்கும், ஒவ்வொரு பாணி இருக்கும் அப்படிப்பட்ட அவர்களது தனித்துவமான திறமையில் நடிப்பை வெளிப்படுத்தும் அவர்களுடைய பாணியும், ரசிகர்களின் ரசிப்புத்தன்மையும் ஒன்றிணையும்போது அந்த கலைஞர்களுக்கு வெற்றியும் ,அதன் மூலம் புது வாய்ப்புகளும் தேடி வரும். அந்த வரிசையில் தன்னுடைய தனிப்பட்ட குரல் வளத்தாலும். நடிப்பாலும் புகழ் அடைந்து. சிங்ககுரலோன் ஆக தன்னுடைய ஆளுமையை பல படங்களில் வெளிப்படுத்தி இருப்பார் நடிகர் அர்ஜுன் தாஸ்.

பெரும்பாலும் வளர்ந்து வரும் நேரத்தில் நடிகர்கள், ரசிகர்கள் தங்களை எந்த விதமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களோ அதற்கு ஏற்ற மாதிரியே தொடர்ந்து படங்களை தேர்வு செய்வதும் நடிப்பதும் ரசிகர்களை திருப்திப்படுத்துவதும் என தனக்கான இடத்தை பிடிக்கும் வரை, எவ்விதமான புது முயற்சிகளுக்கும் ஆட்கொள்ளாமல் தன்னை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு பயணிப்பார்கள் ஆனால் வெகு சில நடிகர்கள் மட்டுமே ஆரம்ப காலத்தில் தன் மேல் இருக்கும் அடையாளங்களை மாற்றி ரசிகர்களின் எதிர்பார்ப்பை திசை திசை திருப்பி, பலருடைய கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துக் கொள்வார்கள், இது போன்ற முயற்சிகள் சிலருக்கு சாதகமாகவும் ஒரு சிலருக்கு பாதகமாகவும் அமைந்திருக்கும் . ஆனால் தன்னம்பிக்கையோடு, தைரியத்தோடு மனதளவில் பக்குவம் கொண்ட ஒரு சில நடிகர்கள் மட்டுமே இம்முயற்சியை மேற்கொள்வார்கள் ,அப்படிப்பட்ட சிலர்களில் அர்ஜுன் தாசும் ஒருவர்.

‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என்னும் படங்களில் தன்னுடைய தனித்துவமான கம்பீர குரல் வளத்தாலும், அசத்த லான நடிப்பின் வாயிலாகவும் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ். தொடர்ந்து ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற படங்க்ளில் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்றதோடு,‘குட் பேட் அக்லி’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்திலும் தன்னுடைய சிறப்பான நடிப்பு திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் அவர் இடம் பிடித்தார்.

அறிமுகமான படத்தில் இருந்து தொடர்ந்து தன் குரல் மூலமாக, நடிப்பின் மூலமாக பல்வேறு கதாபாத்திரங்களில் தோன்றிய அர்ஜுன் தாஸ் தற்போது முதல்முறையாக, பாம் படத்தின் மூலம் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான தோற்றத்தில் மட்டுமல்லாமல், நடிப்பிலும் புது அனுபவத்தை நமக்கு கொடுத்திருக்கிறார். கிராமத்து இளைஞனாக ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்த தாழ்த்தப்பட்ட கிராமத்தின் இளைஞனாக மாறி உள்ளார் .இதுவரை பார்த்திராத உடல் மொழியும் ,அவரின் தோற்றமும், நடிப்பும் முற்றிலும் வித்தியாசமாக அமைந்ததோடு, ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும் படியாக அமைந்துள்ளது இந்த படத்தில் , அவருக்கே உரித்தான வசனங்கள் இருந்த போதும்( நீ ஒரு அடி முன்ன வச்சு உன் குரலில் பேசினால் இந்த ஊரே பயப்படும்) அதிரடியான ஆக்சன் மூலமாக அதை வெளிப்படுத்தாமல், அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகாமல் பயம் கலந்த பதட்டத்துடன், மிக எளிமையாக கிராமத்து பின்னணியில் அக் கதாபாத்திரத்தின் நாயகனாகவே வாழ்ந்திருக்கிறார்.

அர்ஜுன் தாஸ் தன்னோடு இருக்கும் நடிப்பை வெளிப்படுத்துவதற்கான சரியான கதாபாத்திரம் பாம் படத்தின் மூலம் அவருக்கு கிடைத்துள்ளது , பல்வேறு விதமான நடிப்பை ஒருங்கே செய்து படம் முழுக்க வித்தியாசமாக வியாபித்து இருக்கும் அர்ஜுன் தாஸ் இதுபோன்ற பல மாறுபட்ட முயற்சிகளை தொடர்ந்து எடுப்பதற்கு வாழ்த்துக்களை சொல்வோம். அம்முயற்சிகள் ரசிகர்களின் ஆதரவோடு, வெற்றிபாதையில் நீண்ட தூரத்திற்கு அவர் கலைப்பயணம் தொடர வாழ்த்துவோம்.

Spread the love