Friday, April 17

‘சொட்ட சொட்ட நனையுது’- திரை விமர்சனம்

நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, மற்றும் பலர் ஷாலினி நடிப்பில், காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”.

என்னதான் வேலை வசதி பதவி என சகல தகுதிகளுடன் ஆண்கள் இருந்தாலும் பல சமயங்களில் அவர்களது திருமணத்திற்கு தடையாக இருப்பது அவர்களின் தலைமுடியும் ஒரு காரணமாக இருக்கிறது வழுக்கை தலையுடன் இருக்கும் வாலிபர்களுக்கு அதனை குறையாக நினைக்கும் பெண்களினால் திருமண கனவு என்பது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது இப்படிப்பட்ட சூழலில் முடி உதிர்ந்து வழுக்கை தலையுடன் காட்சியளிக்கும் நாயகன் தான் இந்தப் படத்தின் கதையின் நாயகன் இந்த கதாபாத்திரத்தில் நிஷா நடித்துள்ளார் பல பெண்கள் அவரது தலை வழுக்கையை காரணம் காட்டி திருமணம் செய்யாமல் புறக்கணித்து விடுகிறார்கள் இந்த சமயத்தில் அவரது எதிர் வீட்டில் வசிக்கக்கூடிய ஷாலினி நிஷா திருஷோவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார் ஆனால் திருமண நாள் நெருங்கி வரும் சூழலில் விஷால் திருச்சூர் அந்த திருமணத்தை நிறுத்தி விடுகிறார் இதற்கு என்ன காரணம் ?மீண்டும் அவருக்கு திருமணம் நடைபெற்றதா? இல்லையா ?என்பதை காமெடியுடன் சொல்வதே சொட்டச் சொட்ட நனையுது படத்தின் மீதி கதை.

தமிழ் சினிமாவில் ஏதோ ஒரு காட்சிக்காக பல நடிகர்கள் வழுக்கை தலையுடன் நடித்திருப்பார்கள் ஆனால் இது போல வழுக்கை தலை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நாயகன் நிஷாந்த் ரூஷோ பாராட்டப்படக்கூடியவர், அதேபோல நாயகிகளாக நடித்துள்ள வர்ஷினி, ஷாலினி இருவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வண்ணமாக இயல்பாக நடித்துள்ளார்கள் .ரெஞ்சித் உன்னியின் இசையும், ஒளிப்பதிவாளர் ரயீஷின் காட்சிப்பதிவுகளும், இயக்குனரின் கதையோட்டத்துக்கு உறுதுணையாக அமைந்துள்ளது.உடல் பருமனால் அவதிப்படும் பெண்களை வைத்து தமிழ் சினிமாவில் ஏற்கனவே படங்கள் வந்திருந்தாலும் உடல் குறைபாடுகளினால் தவிக்கும் ஆண்களின் உணர்வுகளை சொல்லும் படங்கள் குறைவு என்று சொல்லலாம் ,அந்த வகையில் இந்த படத்தில் என்னதான் அந்தஸ்து இன்னும் சொல்லப் போனால் அழகு கூட இருந்தாலும் தலையில் முடி இல்லாவிட்டால் பாதிப்புக்கு உள்ளாகும் இளைஞர்களின் வாழ்க்கைச் சூழலை பிரதிபலிக்கும் வகையில், கதையினையும், காட்சிகளையும் இயக்குனர் நவீத் s ஃபரீத் யதார்த்தமாக அமைத்துள்ளார்

மொத்தத்தில் இந்த ‘சொட்ட சொட்ட நனையுது’ -நகைச்சுவை மழை.

Spread the love